தொகுதி மாறுகிறார் நமச்சிவாயம்! சென்டிமென்ட் காரணமாக மண்ணாடிப்பட்டில் போட்டியிட முடிவு!

0
52

சென்டிமென்ட்டையும், அரசியல் தலைவர்களையும் அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது. தற்போது, சென்டிமென்ட் காரணமாக, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தொகுதி மாறுவது உறுதியாகிவிட்டது.

2016 சட்டமன்ற தேர்தலில் நமச்சிவாயத்தை முதலமைச்சராக முன்னிறுத்தியே காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் முதலமைச்சர் பொறுப்பை கட்சி மேலிடம் நாராயணசாமியிடம் வழங்கியது. அதுமுதலே அதிருப்தியில் இருந்த நமச்சிவாயம், அமைச்சர் மற்றும் எம்.எல்.. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி பாஜகவில் ஐக்கியமானார். இதை முன்கூட்டியே கணித்து வேல்ஸ் மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

Also Read : அமைச்சர் பதவி ராஜினாமா! பாஜகவில் இணைய ஆயத்தம்! காங்கிரஸை கதறவிடும் நமச்சிவாயம்!

பாஜகஎன்.ஆர். காங்கிரஸ் கூட்டணி இறுதியாகாத நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக பாஜக நமச்சிவாயத்தை முன்னிறுத்துகிறது. குறைந்தது 20 தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது பாஜக மேலிடத்தின் முடிவாக உள்ளது (கூட்டணி இறுதியானால் காட்சிகள் மாறும்). 

கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகினால், நமச்சிவாயத்தின் நகர்வு எப்படி இருக்கும் என்று அவரது முக்கிய ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, “என்.ஆர். விலகினால், நமச்சிவாயம்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

உழவர்கரை தொகுதியில் மூன்று முறை நமச்சிவாயம் போட்டியிட்டார். அடுத்து வில்லியனூரில் மூன்று முறை போட்டியிட்டு அரசியலில் தனக்கான இடத்தை தக்கவைத்தார். சாதாரண அரசியல்வாதியாக உழவர்கரையில் போட்டியிட்ட நமச்சிவாயம், வில்லியனூரில் போட்டியிட்டபோது, படிப்படியாக உயர்ந்து, மாநிலத் தலைவராகவும், அமைச்சரவையில் இரண்டாவது இடத்தையும் பெற்றார்.   

இந்த நிலையில், 2016-ல் இழந்த முதலமைச்சர் பதவியை பெற வேண்டுமானால், சென்டிமென்ட்டாக தொகுதி மாறுவதே சிறந்தது என அவர் கருதுகிறார். உழவர்கரை, வில்லியனூரில் தலா மூன்று முறை போட்டியிட்டாகிவிட்டது, எனவே இந்தத் தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் அவர் களமிறங்குவார். அதற்கு அடித்தளமாக முன்னாள் எம்.எல்.. அருள் முருகனை, நமச்சிவாயம் பாஜகவில் இணைத்துள்ளார். அதேபோன்று மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளான வீரராகவன், சீனிவாச ரெட்டியார் உள்ளிட்டோரையும் பாஜகவில் இணைத்துள்ளார்.

வில்லியனூர் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் இருப்பதால்தான், நமச்சிவாயம் தொகுதி மாறுவதாக சிலர் வதந்தி பரப்புகிறார்கள். இதுபற்றி மக்களும் விவாதித்து வருகின்றனர். வில்லியனூர் தொகுதியில் எங்கள் வெற்றி எழுத்தப்பட்ட ஒன்று. ஆனால், மூன்று தேர்தலுக்கு ஒருமுறை தொகுதி மாறும் சென்டிமென்ட் தன்னை முதலமைச்சராக்கும் என்று நமச்சிவாயம் உறுதியாக நம்புகிறார். எனவேதான் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட அவர் முடிவு செய்திருக்கிறார்என்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry