இரு சக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

0
12

இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படியும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013-ல் பேருந்து மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவர் ஒவருக்கு 90 சதவிகித ஊனம் ஏற்பட்டது. கூடுதல் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிக்க அதிக வேகமே காரணம். இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.
வேகக் கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்

எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்று 2018ம் ஆண்டு பிறபித்த உத்தரவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பள்ளிப் பாடத்திட்டங்களில் சாலை விதிகளையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry