தேன் அற்புதமான பல நன்மைகளை வழங்குகிறது. அதேநேரம் அதிகமாக தேன் உட்கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேன் என்பது 80% சர்க்கரை மற்றும் 20% நீரை கொண்டது; 1 தேக்கரண்டி தேனில் 64 கலோரிகள் உள்ளன. Manuka, Buckwheat, Wildflower, Alfalfa , Blueberry, Orange blossom, Clover என தேனில் பல வகைகள் உள்ளன. இவற்றில் மனுகா வகை தேன் தான், மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
இயற்கையில் கிடைக்கும் வரப்பிரசாதமான தேன் அதிக நன்மைகளை வழங்கக்கூடிய ஒன்று; இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தடுக்க என பல ஆரோக்கிய பயன்களை தேன் வழங்குகிறது. தேன் மற்றும் எலுமிச்சையை சேர்த்து ஒரு கலவையாக உட்கொள்ளும் பொழுது, அது மேலும் அதிக பயன்களை அளிக்கும்; தேனையும் நீரையும் கலந்து உட்கொள்ளும் பொழுதும் அதிக நன்மைகள் கிடைக்கும்.
தேனில் இருக்கும் இயற்கையான, தனித்துவமான இனிப்பு, உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சரியான உணவு ஆகும். உணவு மற்றும் பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தினால், உடலில் பல நன்மைகள் ஏற்படும். காலை மற்றும் இரவு உறங்க செல்லும் முன் ஆகிய இரு நேரங்களிலும் சூடான பாலில், ஒரு தேக்கரண்டி தேனை கலந்து சில காலத்திற்கு பருகி வந்தால், மூளையின் கட்டளையால் நமக்குள் ஏற்படும் இனிப்பு உணவுகள் மீதான ஆசையை எளிதில் போக்கி விடலாம்.
தேனில் இருக்கும் இனிப்பு, செயற்கை சர்க்கரையில் இருக்கும் இனிப்புகளை காட்டிலும் வித்தியாசமாக, ஆரோக்கியமான முறையில் செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இருமலுக்கு தேன் ஒரு மிகச்சிறந்த, பயனுள்ள மருந்து என பல ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன. குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாக, தேனை அளிக்கும் முன் மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசிப்பது நல்லது.
அடர்த்தி குறைந்த தேனை காட்டிலும், அடர்த்தி நிறைந்த தேனையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அடர்த்தி நிறைந்த தேனில் தான் அதிக ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அடங்கியுள்ளன. எலுமிச்சை சாறுடன் சுடுநீர், தேன் கலந்த கலவை, சளித்தொந்தரவை குணப்படுத்தவும், தொண்டையில் ஏற்படும் நெரிசலை போக்கவும், நீர்ச்சத்து இழப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது.
தேனில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 45 முதல் 64 வரை மாறுபடுகிறது; இது சராசரியான அளவு தான். தேனை உட்கொள்வதால், உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து, இரத்த சர்க்கரையின் அளவு குறையும் என்று பல ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன. தேன், உடலின் திரவத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை (குறைந்தது 8 மணி நேரங்களுக்குள்ளாக) குறைக்க உதவும்; உடலில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த உதவும் C-பெப்டைடு சத்தினை அதிகரிக்க தேன் பயன்படுகிறது. ஆகையால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு அரைக்கரண்டி தேனினை தேநீர், ஓட்ஸ் உணவு அல்லது யோகார்ட்டில் கலந்து உட்கொள்ளலாம். ஆனாலும் சர்க்கரை நோயாளிகள் தேனை உட்கொள்ள தொடங்கும் முன் மருத்துருவரிடம் ஒருமுறை கலந்தாலோசித்து கொள்வது பாதுகாப்பானது.
காயங்கள், குறிப்பாக தீக்காயங்கள் மீது தேனை தடவுவது, அவற்றில் காணப்படும் இறந்த, தேவையற்ற செல்களை நீக்கி, தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும். இலேசான தீக்காயங்களை முதலில் தண்ணீரால் கழுவிய பிறகு, அதன் மீது நீங்கள் தேனை தடவலாம்.
2011 ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வின்படி, தேன் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று பரிந்துரைக்கப்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க தேன் உதவுகிறது. தூய்மையான தேனில், என்சைம்கள், புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை குறைந்த அளவே காணப்படும்; இது ஒருவரின் உடலுக்கு தேவையான ஆற்றல் அளவை சரிவர பங்களிக்க உதவுகிறது.
எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க தேன் உதவுகிறது. உணவு முறை சார்ந்த காரணிகளில், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்களை அதிகம் உறிஞ்சும் திறன் தேனில் தான் காணப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தேன் உதவுகிறது. தேனில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் இதயத்தை பாதுகாக்கவும், மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் தேன் உதவுகிறது. ஆஸ்துமாவுக்கும் தேன் நிவாரணம் தருகிறது. தேனில் காணப்படும் பினோலிக் கலவைகள், புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டவை மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கும் தன்மை கொண்டவை ஆகும்.
தேனினால் பல நன்மைகள் ஏற்படினும், ஒரு சில பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. செலரி, மகரந்தம் சார்ந்த சென்சிட்டிவிட்டி அல்லது தேனீ சார்ந்த ஒவ்வாமைகளை கொண்ட நபர்கள், தேனை பயன்படுத்துவதில் இருந்து விலகி இருக்க வேண்டும்; தேன் கூடு தொடர்பான அலர்ஜி, உதடு அல்லது நாக்கில் அழற்சி, மூச்சுத்திணறல், குரல் மாறுபாடுகள், பெரு மூச்சுத்திணறல் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. தேன் எளிதாக பற்களில் ஒட்டும் தன்மை கொண்டது. ஆதலால் தேன் உட்கொண்டதும் நன்றாக வாய் கொப்பளித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பற்களில் படிந்து பற்சிதைவுக்கு வழிவகுத்துவிடும்.
சரியற்ற இதய துடிப்பு, மங்கிய பார்வை, தலை சுற்றல், டையரியா, பலவீனம், காய்ச்சல் ஆகிய அசௌகரிய பிரச்சனைகளை தேன் ஏற்படுத்தலாம். உதிரப்போக்கு நேரும் வாய்ப்பை தேன் அதிகரித்து விடலாம். கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உரிய மருத்துவ ஆலோசனை இல்லமல் தேனை உபயோகிக்க வேண்டாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry