ஆக்ரோஷமாக ஸ்டம்பை உதைத்த ஷகிப் அல் ஹசன்!  சிம்பிளான தண்டனை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

0
123

கிரிக்கெட் போட்டியின் போது ஸ்டம்பை காலால் உதைத்து, பிடுங்கி எறிந்து, அம்பயரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு பெயரளவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரைப் போன்று வங்கதேசத்தில் டாக்கா பிரீமியர் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அபஹானி மற்றும் மொஹம்மதன் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி தானாவில் நடந்தது.

அபஹானி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அந்த அணியின் முஷ்ஃபிகுர் ரஹ்மானுக்கு LBW கொடுக்க நடுவர் மறுத்தார். இதனால் கோபமடைந்த மொஹம்மதன் அணியின் கேப்டன் ஹகிப் அல் ஹசன், ஸ்டம்புகளை எட்டி உதைத்தோடு மட்டுமல்லாமல்,  நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஸ்டம்ப்பை பிடிங்கி எறிந்து நடுவருடன் அவர் சண்டை போட்டார்.

அதோடுநில்லாமல், எதிரணி கோச்சான கலீல் மஹ்மூத்திடமும் அவர் வாக்குவாதத்தில்  ஈடுபட்டார். ஷிகிப் அல் ஹசனின் இந்த செயல் உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. தன்னுடைய தவறுக்காக ஷகிப் அல் ஹசன் ஃபேஸ்புக்கில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.

இருப்பினும் கிரிக்கெட் விதிகளுக்கு முரணாக ஷகிப் அல் ஹசன் நடந்து கொண்டதால் அவர் மீது வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. டாக்கா பிரிமியர் லீக்கில் 3 போட்டிகளில் விளையாட ஷகிப் அல் ஹசனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. அத்துடன் 5, 800 அமெரிக்க டாலர்கள்  அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நடுவர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டாரா என்பது விசாரிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் குழு அமைத்துள்ளது. இதனிடையே, ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்ட தண்டனை பெயரளவுக்கு இருப்பதாகவும், உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry