உக்ரைனில் இருந்து வெளியேற உதவி! பிரதமர் மோடிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பாகிஸ்தான் மாணவி!

0
225

ரஷ்யா தாக்குதலால் உக்ரைனில் சிக்கி தவித்த தன்னை, இந்திய பிரதமரும், அதிகாரிகளும் பாதுகாப்பாக மீட்டனர் என்று பாகிஸ்தான் மாணவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் சிக்கி தவித்து வந்த பாகிஸ்தான் மாணவி ஒருவரை இந்திய தூதரக அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். இது குறித்து அந்த மாணவி வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய பெயர் அஸ்மா ஷஃபிக். எனது நாடு பாகிஸ்தான். இங்கு மிகவும் நெருக்கடியாக உள்ள நிலையில், பாதுகாப்பாக நான் வெளியேற இந்திய தூதரகம் உதவியுள்ளது. இதற்காக இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், இந்திய பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் எனது குடும்பத்தினரை சந்திக்க உதவியதற்காக நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry