1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு நடக்கும்! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

0
125

தமிழ்நாட்டில் 1 முதல் 5 -ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கிடையாது எனத் தகவல் வெளியான நிலையில்,  ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் தெரிவித்துள்ளார்.

1 – 5ம் வகுப்புகளுக்கு பள்ளி இறுதித் தேர்வு இல்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தாக தகவல் வெளியானது. மேலும், `6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும். ஒன்பதாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறும். நடப்புக் கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13 ஆம் தேதி என்றும், 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும். அதேநேரத்தில் 11 ஆம் வகுப்பு மட்டும் ஜூன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும்’ என கூறப்பட்டது.

கோப்புப் படம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்நிலையில், புதுகோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “1 முதல் 9ம் வகுப்பு வரை நிச்சயம் இந்த ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும். பாடத்திட்டம் ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் தேர்வு நடைபெறும். 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வு நடைபெறாது எனும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். ஆண்டு இறுதித் தேர்வு குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry