முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கள்ள உறவில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என சென்னையில் பேசியது அனைவரும் அறிந்ததே. இதேபாணியில் மேலும் சில இடங்களில் அவர் பேசியிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து கடந்த 26-ந் தேதி மக்களவை எம்.பி.யும், திமுக துணை பொதுச் செயலாளருமான ன ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அவரது தாய் குறித்து அவர் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். திமுக வாக்குகளை இது மொத்தமாக புரட்டிப்போட்ட நிலையில், தமிழகம் முழுவதும் ராசாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. கொங்கு வேளாளர் சங்க கூட்டமைப்பும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது. ஆ. ராசாவால், கொங்கு மண்டல வாக்குளை திமுக ஏறக்குறைய இழந்துவிட்டது என்றே கருதலாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மு.க. ஸ்டாலின், பிரச்சாரத்தின்போது கண்ணியமாக பேச வேண்டும் என அறிக்கை விட்டார். அதிலேயே ராசாவின் பேச்சு எடிட் செய்யப்பட்டதாக அவர் சமாளித்தார். ஆனால், வீடியோ தெளிவாக இருந்தும், ஸ்டாலின் யாருக்கு பயப்படுகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடைபெறுகிறது. ஆனாலும், தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது, எனவே வருத்தம் தெரிவிக்க முடியாது என ஆ.ராசா தீர்மானமாகக் கூறினார்.
பிரச்சனை விஸ்வரூபமெடுத்து, திமுக–வில் உள்ள வாக்குகள் புரட்டிப்போடப்பட்ட நிலையில், உதகையில் உள்ள ராசாவுக்கு, கட்சித் தலைமையில் இருந்து மன்னிப்பு கோருமாறு அழுத்தம் தரப்பட்டது. அதற்கான வாக்கியங்களும் தலைமையில் இருந்து ராசாவுக்கு அனுப்பப்பட்டது. வேறுவழியில்லாமல், நிர்ப்பந்தம் காரணமாக இறுகிய முகத்துடன் ராசா அந்தக் கடிதத்தை பத்திரிகையாளர்களிடம் வாசித்தார்.
பெண்களை போற்றுவோரும், தாய்மையை கொண்டாடுவோரும் ராசாவின் இந்த மன்னிப்பை ஏற்கத் தயாராக இல்லை. ஏனென்றால், ஆ.ராசா சென்னையில்தான் இப்படிப் பேசினார் என நினைத்திருந்த நிலையில், கடந்த 16-ந் தேதி, இதே போன்று அரியலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். அதேபோன்று மற்றொரு கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுகிறேன் எனக் கூறிக்கொண்டு “உன் அம்மாவைவிட (உடல் நலக்குறைவால் ஜெயலலிதா மரணித்ததை கொச்சைப்படுத்துகிறார்) உனக்கு மோசமான சாவு வரும், உனது பிறப்பு நியாயமானதுதானா என கேட்கிறார்.
இந்நிலையில், சென்னையில் ஆ. ராசா பேசியது குறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதேநேரம், தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று கூறியுள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, முதலமைச்சர் குறித்த ஆ ராசா விமர்சனம் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry