இந்துக்கள் தீபாவளி, பொங்கல் கொண்டாட திமுக கூட்டணி எதிர்ப்பு! தீபாவளியை கொண்டாடுவது ‘வியாதி’ என கருத்து!

0
70

இந்துக்களின், தமிழர்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் ஆகியவற்றை இந்து மத முறைப்படி கொண்டாடக் கூடாது என்று திமுக தாய்க் கழகமும், திமுக கூட்டணி கட்சியும் கூறியுள்ளது.

தீபாவளி கொண்டாடுடவது மானக் கேடு, கேவலமானது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார். தீபாவளி கொண்டாட்டம் ஒரு வியாதியைப் போன்றது என்றும் அவர் சித்தரித்துள்ளார்.

அதேபோல, சூரியனை வணங்குவது, மாடுகளை வணங்குவது என பொங்கல் பண்டிகையை வழிபாட்டுக்குள் கொண்டு சென்றது தவறு. இதனால் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சிக்கல் வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆளுர் ஷா நவாஸ் கூறியுள்ளார்.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீபாவளி, பொங்கல் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று திமுகவிலேயே உள்ள இறை நம்பிக்கையாளர்கள் கூறுகின்றனர்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry