ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 அதிகரிப்பு! விலை உயர்வு இன்றே அமலுக்கு வருவதாக அறிவிப்பு!

0
18
Aavin Ghee & Butter Prices Hiked Ahead Of Festive Season

ஆவின் நெய் விலை லிட்டருக்கு 70 ரூபாயும், அரை லிட்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (செப்சம்பர் 14) முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் பால், தயிர், வெண்ணெய், நெய், உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பொதுமக்களிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்யும் ஆவின் நிர்வாகம், நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. இதுதவிர, ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும், ஐஸ் கிரீம் மற்றும் பால் பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளுக்கும் மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது.

Also Read : காவிரி விவகாரத்தில் தத்தளிக்கும் திமுக! நட்பு வேறு, மாநில நலன் வேறு என்பதில் தெளிவாக இருக்கும் கர்நாடக, கேரள முதல்வர்கள்!

இந்நிலையில், ஆவின் நிறுவனம் நெய் மற்றும் வெண்ணெயின் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 100 மி.லி நெய் பாக்கெட் , பத்து ரூபாய் அதிகரித்து, ரூ.80-க்கும், ரூ.315-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை லிட்டர் நெய் 50 ரூபாய் அதிகரித்து, ரூ.365-க்கும், ரூ.630-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் நெய் 70 ரூபாய் அதிகரித்து, ரூ.700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை கிலோ வெண்ணெய், 15 ரூபாய் அதிகரித்து, ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் சூழலில் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • மார்ச் 2022 இல், ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு ₹20 உயர்த்தப்பட்டது.
  • ஜூலை 2022, தயிர், நெய், லஸ்ஸி, மோர் மற்றும் பிற பொருட்களின் விலை உயர்வைக் கண்டது, அவை சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மாற்றங்களுக்குக் காரணம்.
  • நவம்பர் 2022 இல் ஆவின் பிரீமியம் பாலின் விலை லிட்டருக்கு ₹12 அதிகரித்தது, இருப்பினும் கார்டுதாரர்களுக்கு இந்த உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
  • டிசம்பர் 2022 இல், நெய்யின் விலை லிட்டருக்கு ₹50 அதிகரித்தது, அதே நேரத்தில் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரித்தது.
  • பிப்ரவரி 2023 விலை குறைப்பு நடவடிக்கையாக தரப்படுத்தப்பட்ட பாலில் (பச்சை பாக்கெட்டுகள்) கொழுப்பு உள்ளடக்கத்தை குறைத்தது.
  • ஜூலை 2023 இல் பனீர் மற்றும் பாதாம் கலவையின் விலைகள் அதிகரித்தன.
  • கடந்த மாதம், ஆகஸ்ட் 2023 இல், 5 லிட்டர் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டின் விலை 10 ரூபாய் உயர்ந்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry