இன்ஸ்டாவைப் போலவே வாட்ஸ்அப்-லும் Channel அம்சம் அறிமுகம்! WhatsApp Channels: Here’s Everything You Need To Know!

0
52
Meta launched WhatsApp Channels in India 

வாட்ஸ்அப் தளத்தில் ‘Channels’ எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள், சக பயனர் மற்றும் தாங்கள் பின்தொடரும் வாட்ஸ்அப் அக்கவுன்ட் தரப்பில் பகிரப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். யூடியூப் போல் வாட்ஸ்அப் சேனல் அறிமுகப்படுத்தப்படுகிறது. விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களைப் பெறலாம்.

Also Read : WhatsApp மூலமாக வரும் மோசடி அழைப்புகளை கண்டறியும் Truecaller! இன்ஸ்டால் செய்வது எப்படி?

இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் போல WhatsApp channels இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அட்மின்கள் அல்லது தனிநபர்கள் போட்டோ, டெக்ஸ்ட், வீடியோ, ஸ்டிக்கர்ஸ், வாக்கெடுப்பு போன்றவற்றை நடத்த முடியும். இதில் அட்மின் மற்றும் ஃபாலோயர்களின் பிரைவசிக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஒரு வாட்ஸ்அப் கணக்கை பின்தொடர்பவர்கள் சக ஃபாலோயர்கள் குறித்த விவரங்களை அறிய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென ‘அப்டேட்ஸ்’ எனும் Tabஐ வாட்ஸ்அப் தளத்தில் மெட்டா சேர்த்துள்ளது. இதில் பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட் மற்றும் சேனல்களில் பகிரப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் சாட், மின்னஞ்சல் மற்றும் ஆன்லைன் போஸ்ட் மூலம் பயனர்கள் சேனல்ஸ் அம்சத்தை அக்சஸ் செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் வாட்ஸ்அப் சேனல்ஸில் பகிரப்படும் தகவல்களுக்கு ரியாக்ட் செய்யலாம். கன்டென்ட் கிரியேட்டர்ஸ் மற்றும் வணிக நோக்க ரீதியாக இயங்குபவர்களுக்கு சேனல்ஸ் அம்சம் உதவும் என தெரிகிறது.

WhatsApp சேனல்களை எப்படிபயன்படுத்துவது?

* Google Play Store அல்லது App Store இலிருந்து உங்கள் WhatsApp செயலியை அதன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்யவும்.
* வாட்ஸ்அப்பைத் திறந்து, ஸ்கிரீனின் அடிப்பகுதியில் உள்ள Updates என்ற டேப்-ஐ கிளிக் செய்யவும். நீங்கள் பின்தொடரக்கூடிய சேனல்களின் பட்டியலைக் காண்பீர்கள்.
* சேனலைப் பின்தொடர, அதன் பெயருக்கு அடுத்துள்ள ‘+’ ஐகானை கிளிக் செய்யவும். அதன் சுயவிவரத்தையும் புரொஃபைல் பிக்சரையும் பார்க்க, சேனல் பெயரையும் கிளிக் செய்யலாம்.
* சேனல் அப்டேட்க்கு ரியாக்‌ஷன் செய்ய விரும்பினார். அந்த செய்ட்தியை லாங் பிரஸ் செய்யவும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry