முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறோம்! அற்பமான அரசியல் செய்கிறார்! ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக!

0
473

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மேடையிலேயே பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

Also Read: தேசிய கல்விக் கொள்கை ஏன் முக்கியம்? மு.க. ஸ்டாலினுக்கு பாடம் எடுத்த பிரதமர் மோடி!
Also Read: திராவிட மாடல், கூட்டுறவு, கூட்டாட்சி! நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர்! பிரதமர் முன் முழங்கிய ஸ்டாலின்!

சென்னை விமான நிலையத்தில் பிரதமரை டெல்லிக்கு வழி அனுப்பி வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் நடந்துகொண்ட விதம், ஒரு மாநில முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாதோ அப்படி இருந்தது.

மத்திய அரசு நடத்திய நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள் பிரதமர் முன் நடத்திய அரசியல் நாடகம். குறிப்பாக 1976ல் அப்போதைய காங்கிரஸ் அரசும், திமுக அரசும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டு, தற்போது திமுகவே கச்சத்தீவை மீட்டு தர பிரதமரிடம் கோரிக்கை வைப்பது, தமிழக முதலமைச்சர் சரித்திரம் தெரியாமல் பேசி உள்ளதை வெளிப்படையாக காண்பிக்கிறது.

தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கொடுக்க வேண்டிய தொகையை, பிரதமரிடம் கேட்பது என்பது மாநில முதலமைச்சருக்கு ஜிஎஸ்டி கவுன்சில் எப்படி செயல்படுகிறது என்றே தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

2009 ஈழப் போர் நடைபெற்றபோது ராஜபக்சவுடன் விருந்தில் கலந்து கொண்டது, இலங்கை இறுதிப்போரின்போது, மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு எத்தனை அமைச்சர்கள் என பேரம் பேசிவிட்டு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல் திமுக நடிக்கிறது. ராஜபக்சவுடன் திமுக பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் வெளியிட உள்ளோம். ஈழத்தமிழர்களுக்கு முதல் விரோதி திமுக தான். மத்திய அரசு நடத்திய நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.” இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “ஒரு சாதாரண இந்திய குடிமகனாகவும், பெருமைக்குரிய தமிழனாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மோசமான நடந்தையால் வெட்கப்படுகிறேன். நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இங்கு வந்தார். பாஜகவின் நிகழ்ச்சிக்காக வரவில்லை. முதலமைச்சர் இந்த விழாவில் நன்றாக நடந்துகொள்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் தன்னை தானே இழிவுபடுத்திக்கொண்டார்.

நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு குறித்து பேச வேண்டும் என்கிறார். ஆனால், அவர் கடந்த 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் கச்சத்தீவு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதை மறந்துவிட்டார்.

1974 ஆம் ஆண்டிலிருந்து திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து மக்களை கூட்டாக கொள்ளையடித்து வருகின்றனர். ஏன் இந்த திடீர் விழிப்புணர்வு? ஜி.எஸ்.டி. விவகாரத்தில், ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகள் எப்போதும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படுபவை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்த வேண்டும். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு மீதம் இருக்கும் இழப்பீட்டை வழங்குவதற்கான விருப்பத்தை தமிழ்நாடு அரசாங்கம் எடுத்தது. இல்லாத பிரச்சனைகளை அவர்கள் உருவாக்குகின்றனர்.

மு.க.ஸ்டாலினோ அல்லது திமுகவோ உண்மைகளை பொருட்படுத்துவது இல்லை. அரசியல் செய்வதில் மட்டுமே அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மொழியை எடுத்துக்கொண்டால், பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மீதான, தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம் மீதான தனது பற்றை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி வருகிறார். ஸ்டாலினுக்கு பதில் தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த விவகாரத்தில் தான் கூறியதை அவரே நம்ப மாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அற்பமான அரசியலை மட்டுமே செய்து வருகிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry