வாடகை வீட்ல இருக்கீங்களா..? எப்ப சொந்த வீடு அமையும்னு தெரிச்சுக்கோங்க? According to astrology, who will own a house?

0
68
Are you in a rented house? Do you know when you will have your own house? | GETTY IMAGE

நம்மில் பலருக்கு வாழ்நாள் லட்சியம், ஆசை, விருப்பம் எல்லாம் சொந்த வீடு வாங்குவதுதான். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே அனைவரது எண்ணம். நமக்கு பின்னர் வரும் சந்ததியினர் சுகமாக வாழ கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும், பெயர் சொல்ல ஒரு வீடாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அனைத்தையும் விட மேலாக இன்றைய காலத்தில் சொந்த வீடு என்பது சமூக அந்தஸ்தாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சொந்த வீட்டின் பெருமை வாடகை வீட்டில் இருப்பவர்களுக்குதான் தெரியும். ஒவ்வொரு முறையும் வீடு பார்க்கும் போது கிடைக்கும் அனுபவங்கள், அலைச்சல்கள் மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு அலைவது என வாடகை வீட்டில் இருப்பவர்கள் படும் இன்னல்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மாட மாளிகையாக இல்லாவிட்டாலும் சொந்தமாக குடிசையாவது இருந்தால் சுதந்திர பறவையாக அவர்கள் உணர்வார்கள்.

சொந்த வீடு அமைப்பு :

சிலர் கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தாலும் மனதிற்கு பிடித்த வீடு அமையாது. சிலர் ஏராளமான வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு, மாதாமாதம் வாடகை பணத்தை வாங்கி கொண்டு ஜாலியாக செலவு செய்வார்கள். ஒருசிலர் பேங்கில் லோன் போட்டு ஒரேயொரு வீடு வாங்கி ஆயுள் முழுவதும் இஎம்ஐ கட்டி வருவார்கள். சிலர் கடன் பெற்று வீடு வாங்கினாலும் கடனை திருப்ப செலுத்த முடியாமல், ஏலம் விடும் நிலைக்கு தள்ளப்படுவதையும் பார்க்கிறோம். இதெல்லாம் அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தான் காரணம்.

பொதுவாக ஜாதகத்தில் லக்னத்திற்கு 4-ஆம் வீடுதான், வீடு, வாகனத்தை குறிக்கும் இடம். 4-ம் இடம், 4-ம் இடத்து அதிபதி, 4-ம் வீட்டில் அமர்ந்துள்ள கிரகம், 4-ம் இடத்தை பார்க்கும் கிரகம் மற்றும் செவ்வாய், சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் ஒருவருக்கு சொந்தமாக வீடு அமையும்.

Also Read : ஆட்டிப் படைக்கும் ஆவி உலகத் தலைவன் மாந்தி! சுப காரியத் தடைகளை ஏற்படுத்தும் சனியின் மகனுக்கு என்ன செய்யலாம்?

சொந்த வீடு யாருக்கு அமையும்?

1. ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு 4-ம் வீட்டில் ஆட்சியோ, உச்சமோ பெற்ற கிரகம் இருந்தால் அழகான வீடு அமையும்.

2. லக்னத்திற்கு நான்காம் வீட்டு அதிபதி ஆட்சி/உச்சம் பெற்று அந்த கிரகத்தின் தசா நடைபெற்றால், கட்டாயம் சொந்த வீடு கட்டி அதில் வசிக்கும் யோகம் கிட்டும்.

3. ஜாதகத்தில் சொகுசு, வீடு, வண்டி, வாகனங்களை குறிக்கும் சுக்கிர பகவான், லக்னத்திற்கு 4ஆம் இடத்தில் இருந்தால் கூடுதல் சிறப்பு. 4-ல் சுக்கிரன் திக் பலம் பெற்றிருப்பார் என்பதால் சொந்தமாக வீடு, வாகனம் அமையும். 4-ல் அமர்ந்து சுக்கிர தசா நடப்பில் வரும்போதும் சொந்தமாக வீடு அமையும். 4-ல் சுக்கிரன், ராகு இணைவு பெற்று, சுக்கிர தசையோ, ராகு தசையோ வந்துவிட்டால் சூப்பர். ஷங்கர் படத்தில் வருவதை போல வீடு, வாகனம் என்று எல்லாமே பிரமாண்டமாக இருக்கும்.

4. லக்னத்திற்கு 4-ஆம் வீட்டின் அதிபதி லக்னத்திற்கு கேந்திரம்/திரிகோணம் ஏறி பலமுடன் நின்று உடன் சுபகிரக சேர்க்கை/பார்வை பெற்று திசை நடைபெற்றாலும் வீடுகட்டும் யோகம் அமையும்.

5. 4-ஆம் வீட்டில் ராகு இருந்தாலும் தீய கிரக சேர்க்கையின்றி அமைந்த ராகுவிற்கு இடம் கொடுத்த கிரகம் ஆட்சி/உச்சம் அடைந்து திசை நடைபெற்றால் சொந்தவீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.

5. லக்னத்திற்கு 5-ஆம் வீட்டின் அதிபதி கேந்திரம் ஏறி பலமுடன் நின்று திசை நடைபெற்றால் தந்தை வழி பூர்வீக வீட்டை, வீட்டில் சில திருத்தம் செய்து குடியிருக்கும் யோகம் உண்டாகும்.

6. சொந்த வீட்டிற்கு ஏராளமான விதிகள் ஜோதிடத்தில் இருந்தாலும், அடிப்படையில் செவ்வாய், சுக்கிரன் நல்ல நிலையில் இருந்துவிட்டால் சொந்த வீடு தானாக அமையும். செவ்வாய் காலி இடத்தையும் (வீட்டு மனை), சுக்கிரன் வீட்டையும் குறிக்கும். செவ்வாய், சுக்கிரன் இருவரும் ஆட்சி/உச்சம் பெற்று குரு பார்வை பெற்றுவிட்டால், காலி மனை வாங்கி வீடு கட்டி குடியேறுவார்கள்.

7. செவ்வாய், சுக்கிரன் நீசம் அடைந்தோ, 6, 8, 12-ல் மறைந்து விட்டால் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட முடியாது. செவ்வாய் கெட்டு சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கலாம். குறிப்பாக புது வீடு வாங்காமல் பழைய வீட்டை வாங்கினால் தோஷம் நிவர்த்தியாகும்.

Also Read : டாய்லெட்டுக்கு ஃபோன் கொண்டுபோவீங்களா? பைல்ஸ் தொடங்கி மன அழுத்தம் வரை..! பதற வைக்கும் பாதிப்புகள்! Your Phone Is a Germ Factory

தொடர்புக்கு:- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர். ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

ஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை 91590 13118 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பிலோ அல்லது astrovenkataeswar@gmail.com என்ற மெயிலுக்கோ அனுப்பினால், வரும் நாட்களில் வேல்ஸ் மீடியா இணைய இதழில் பதில்கள் வெளியாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry