சிறந்த மனிதநேய விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா! உழவர்களுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சி!

0
71

Take Care International Foundation என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் Pride of Humanity விருது வழங்கி கௌரவிக்கிறது.

அந்த வகையில் சுற்றுச்சூழல் ஆர்வலரும், நடிகருமான செளந்தர்ராஜாவுக்கு, இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் Pride of Humanity 2022 விருதை செளந்தர்ராஜா பெற்றுக்கொண்டார். மண் மனம் மாறாமல், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக வேட்டி சட்டையுடன் அவர் விருதை பெற்றது, மலேசிய வாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள செளந்தர்ராஜா, சேவையுடன் கூடிய கடமையை தாம் செய்து வருவதாகவும், மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள், இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம் என்று கூறினார். இந்த விருதை விவசாயிகளுக்கும், இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மலேசியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் ( Deputy Director of police – Malasiya Royal police ) மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பேரன் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசவன், Take Care International Foundation நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

Also Read : நெற்பயிரை காப்பபற்ற கோவை வேளாண் பல்கலை. முக்கிய அட்வைஸ்! வேளாண் படிப்புகளுக்கு 10ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியீடு!

ஐந்து ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளதோடு மட்டுமின்றி, இயற்கையை பராமரிக்க வேண்டியதன் அவசியம், சுற்றுச் சூழல் மற்றும் மரம் நடுதலின் முக்கியத்துவம் குறித்து செளந்தர்ராஜா மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry