வேலூரில் சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு! கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி!

0
38

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு வருவதையொட்டி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 127 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 85 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வேலூர் சென்ற சட்டமன்ற மனுக்கள் குழு முதலாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தது.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின் பின்புறத்தில் குப்பைகள் கொட்டப்படுவதையும், கழிவுநீர் செல்லும் கால்வாயையும் குழு ஆய்வு செய்தது.

Also Read : நெற்பயிரை காப்பபற்ற கோவை வேளாண் பல்கலை. முக்கிய அட்வைஸ்! வேளாண் படிப்புகளுக்கு 10ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியீடு!

பின்னர் பாகாயம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்ற குழுவினர், பெங்களுர் சாலை மாங்காய் மண்டி அருகே, ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைப்பது, காட்பாடி பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கேயநல்லூர்-சத்துவாச்சாரிக்கு இடையே பாலாற்றின் குறுக்கே இணைப்பு பாலம் அமைக்குமாறு மக்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட குழுவினர், சத்துவாச்சாரியில் ஆவின் பால் பண்ணையை ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற மனுக்கள் குழுத் தலைவர் கோவி.செழியன், முதலமச்சரின் ஆணைக்கிணங்க சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுவின் மீது நேரடி கள ஆய்வு செய்தது.

சாக்கடை வசதி, மேம்பால வசதி, மாசுக்கட்டுப்பாட்டு துறை செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்டவை பற்றி களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளது. சாலை வசதி, பாதான சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்துதல் போன்ற கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Also Read : சிறந்த மனிதநேய விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா! உழவர்களுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சி!

கள ஆய்வு மற்றும் கலந்தாய்வு கூட்டத்தில், சட்டமன்றப் பேரவை செயலாளர் கி.சீனிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்களான வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, செங்கம் சட்டமன்ற ஈறுப்பினர் மு.பெ.கிரி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமனு விஜயன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry