திமுக சார்பில் முதலியார்பேட்டையில் களம் இறங்குகிறார் சம்பத்! அமைப்பாளர் சிவா முன்னிலையில்  விருப்ப மனு அளித்தார்‌!

0
13

பிரபல வழக்கறிஞரும், கலாம் சேவை மைய நிறுவனருமான சம்பத், வரும் சட்டமன்ற தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உள்ளார். இதையொட்டி, மாநில திமுக அமைப்பாளர் சிவா முன்னிலையில், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அவர் விருப்ப மனு அளித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், புதுச்சேரியில் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் சம்பத் கலந்துகொண்டார். இதையடுத்து, திமுக தலைவர் மு.. ஸ்டாலின், மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் முன்னிலையில், முறைப்படி தம்மை அவர் திமுகவில் இணைத்துக்கொண்டார்.

முதலியார்பேட்டை தொகுதி மக்களின் நீண்ட கோரிக்கையை ஏற்கும் விதமாக, திமுக சார்பில் அத்தொகுதியில் போட்டியிட சம்பத் முடிவு செய்தார். இதன்தொடர்ச்சியாக, மாநில அமைப்பாளர் சிவா, தொகுதி செயலாளர் திராவிடமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆதரவோடு அண்ணா அறிவாலயத்தில் சம்பத் விருப்பமனு தாக்கல் செய்தார்.

திமுகவில் இணையவும், அக்கட்சி சார்பில் போட்டியிடவும் என்ன காரணம் என்று வழக்கறிஞரிடம் சம்பத்திடம் கேட்டபோது, “திமுக கொள்கை, கலைஞர் மீதான ஈர்ப்பு, மு.. ஸ்டாலின் தலைமை, எனது அரசியல் ஆசானும் மாநில அமைப்பாளருமான சிவாவின் சகோதரத்துவமான அரவணைப்பு ஆகியவற்றை முக்கிய காரணமாகச் சொல்லலாம். 2017 முதலே அடிமட்ட தொண்டனாக வழக்கறிஞர் அணியில் செயல்பட்டு வருகிறேன்.

திமுகவின் அனைத்து ஆட்டோ நலச் சங்கங்களுக்கும் சட்ட ஆலோசகராக எனது சேவையை இலவசமாக செய்து வருகிறேன். வரும் தேர்தலில் எங்கள் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. மு.. ஸ்டாலினின் தன்னிகரற்ற உழைப்பால், அவரது தொலைநோக்குப் பார்வையால் தமிழகம் போன்று புதுச்சேரியும் முன்னேற்றம் அடையும். மாநில அமைப்பாளர் சிவா வழிகாட்டுதலின்படி முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளேன். தலைமை எனக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில், மு.. ஸ்டாலின், மாநில அமைப்பாளர் சிவா ஆகியோருக்கு வெற்றிக் கனியை காணிக்கை ஆக்குவேன்என்று முடித்துக் கொண்டார்.

சென்னை வந்துள்ள அவரது ஆதரவாளர்களிடம் பேசியபோது, வக்கீலின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. பல்வேறு சமூக நலப்பணிகளை அவர் செய்து வருகிறார். குறிப்பாக பசுமைப் பந்தல், கழிவறை இல்லாத வீடுகளுக்கு தனது சொந்த செலவில் கழிவறை கட்டி தந்தது, சுத்தமான குடிநீர் கிடைக்காதவர்களுக்கு இலவசமாக போர் போட்டுக் கொடுத்தது, ஏழை எளியோரது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றது என எண்ணிலடங்கா சமூகப் பணிகளை தொகுதி முழுவதும் செய்துள்ளார்.

சொல்லிக் காண்பிப்பதாக நினைக்க வேண்டாம், கட்சி பேதமின்றி அவரால் பலன் பெற்றவர்கள் வாக்களித்தாலே பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துவிடும். அதுமட்டுமல்ல திமுகவில் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் எதிரிகள் எங்களை கண்டு அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதுஎன்று நம்பிக்கை தெரிவித்தனர். வெற்றியை தீர்மானிக்கப் போவது யார்? வெற்றிக்கனியை பறிக்க போவது யார்? தொகுதி நிலவரம் என்ன என்பதை, வரும் நாட்களில் வேல்ஸ் பார்வையில் விரிவாக பார்க்கலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry