ஆர்யாவின் ‘டெடி’ ட்ரைலர் வெளியீடு! மிரட்டும் மெடிக்கல் த்ரில்லர் திரைப்படம்!

0
34

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆர்யா நடித்துள்ளடெடிதிரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளதுசக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ளடெடி’, திருமணத்துக்குப் பிறகு ஆர்யா நடித்துள்ள முதல் படமாகும்.

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன்,டிக் டிக் டிக் படங்களை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன், அவர் பாணியிலேயேடெடிபடத்தை இயக்கியிருக்கிறார். ஆர்யா, சாயிஷா நடித்துள்ள இப்படம் நேரடியாக  ஹாட்ஸ்டாரில் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே..ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இது த்ரில்லர் படமா? அல்லது பேய் படமா? என்று நம்மை சிந்திக்கவைத்து திகிலூட்டி எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது. ஆனால், மருத்துவத்துறைச் சார்ந்த த்ரில்லர் படம் என்பது மட்டும் ட்ரைலர் உறுதிப்படுத்துகிறது. பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக மிரட்டியிருக்கிறார். மேலும், இப்படத்தில் சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால் எனப் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry