
மத்திய அரசு அறிவித்த பயிர் இழப்பீடு தொகையை வழங்காமல் விடியா திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் குறறஞ்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதி கூத்தாநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூத்தாநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில், மகளிர் அணி, இளைஞர் – இளம்பெண் பாசறை, பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு தலைமையேற்றுப் பேசிய கழக அமைப்புச் செயலாளரும், மாவட்டக் கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்.எல்.ஏ., அஇஅதிமுக 51 ஆண்டுகளை கடந்து 52-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மேட்டூர் அணை மூடபட்டுவிட்டது, விவசாயிகள் கஷ்டபடுகிறார்கள். இந்த நிலைக்கு விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம்.
பயிர் இழப்பீட்டுத் தொகையை ஹெக்டேருக்கு ரூ.13,500லிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாநிலத்தை ஆளும் விடியா திமுக அரசு உத்தரவை மாற்றாமல் விவசாயிகளை வஞ்சிக்கிறது.” என்று பேசினார்.
இதில் ஒவ்வொரு பூத்களிலும் 69 பேர் நியமிக்கப்பட்டு அதற்கான படிவத்தினை காமராஜ் அவர்களிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து திமுகவினர் 60-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் எம்.பி.யும், கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளருமான, திருவாரூர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் இளவரசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எல்.எம். முகமது அஷ்ரப், கூத்தாநல்லூர் நகரக் கழக செயலாளர் ராஜசேகர் உள்பட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry