அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம்! திமுக ராஜ்ஜியத்தில் பூஜ்யம் மட்டுமே பரிசு! அதிமுக கடும் விமர்சனம்!

0
134

இது தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அம்மா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி. உதயகுமார்அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜாக்டோ ஜியோ மாநாடு படுதோல்வி அடைந்துள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஜாக்டோ ஜியோ மாநாடு தோல்வி தான் தற்பொழுது விவாத பொருளாக உள்ளது.

அரசு பணியாளர் நடத்தை விதிப்படி ஊதியம் பெரும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது மிகப்பெரிய குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது. முதல்வரை மேடையில் வைத்துக்கொண்டு ஆளும் கட்சியை புகழ்ந்து அதனால் எதையும் சாதிக்க முடியாத சூழலில் மனக் குமுறலில் அவர்கள் உள்ளனர்.

Also Watch : அது நம்பிக்கை இழந்த மாநாடு! Jacto Geo மாநாடு நடத்த முக்கிய காரணமே இதுதான்! ஐபெட்டோ, ஆசிரியர் கூட்டணி அண்ணாமலை.

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வரின் பேச்சில் எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகாததால், முதல்வர் பேசும்போதே, முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தை விட்டு அரசு ஊழியர்கள் வெளியேறினர். ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நம்பிக்கையை தொலைத்த மாநாடாக அமைந்துள்ளது.  அரசு நிர்வாக அங்கமாக உள்ள அரசு ஊழியர்கள் வேதனையில் உள்ளனர். ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களுக்கு, தமிழக அரசு பட்டை நாமத்தை போட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கூறிய முதல்வர் மாநாட்டில் வாய் திறந்து பேசுவதற்கு தயாராக இல்லை என்பதை வெட்டம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக கூறிவிட்டு தற்பொழுது ஏமாற்றத்தை மட்டும் தந்துள்ளனர்.

Also Read : நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி! 6 மாவட்டங்களில் தேர்வெழுதிய அனைவரும் பாஸ்!

எங்கள் வாழ்வில் விளக்கேற்றி வைக்க முதல்வர் தவறிவிட்டார் என அரசு ஊழியர்கள் முன்வைக்கும் கண்டன குரல் முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கும். 52 சதவீத மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு ரத்து என்ற உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்திற்கு நிகரான காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

பள்ளி,  கல்லூரிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் எதிர்கால தலைமுறையை அச்சமடைய செய்துள்ளது.  விழா நடத்துவதில் வெற்றி கண்டுள்ள தமிழக அரசு பயனாளிகளுக்கு பயன்களை கொண்டு சேர்ப்பதில் தோல்வி கண்டுள்ளது. இந்திய அளவில் விழா எடுப்பதில் முதன்மை முதல்ராக திகழ்கிறார். இந்தியாவில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு உயர்த்துவதில் முதன்மையான முதல்வராக திகழ்கிறார் முதல்வர். சட்டம் ஒழுங்கை வேடிக்கை பார்க்கும் முதல்வராக திகழ்கிறார்.

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் வெறும் வசனங்களை பேசிவிட்டு வந்ததால் அரசு ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர். எனது ராஜ்யத்தில் உங்களுக்கு பூஜ்யம் மட்டுமே பரிசு என ஜாக்டோ ஜியோ மாநாட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார் முதல்வர். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கொண்டு வந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

Also Read : எலி தலையை சேர்த்து செய்த பீட்ரூட் பொரியல்! டோர் டெலிவரி செய்த ஹோட்டல் நிர்வாகம்! அதிர்ந்த வாடிக்கையாளர்!

அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட மகத்தான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து எடுத்து சொல்லும் எதிர்க்கட்சி தலைவரின் கருத்தை இந்த அரசு செவி கொடுத்து கேட்க தயராக இல்லை, நாட்டு மக்களுக்கு எதுவும் செய்ய தயராக இல்லை என்பதையே இது காட்டுதிறது. இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry