அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி! 6 மாவட்டங்களில் தேர்வெழுதிய அனைவரும் பாஸ்!

0
86

நீட் தேர்வு எழுதுவதற்கு 17,972 அரசுப்பள்ளி மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் 12,840 பேர் மட்டுமே தேர்வினை எழுதினார்கள். தேர்வெழுதிய மாணவர்களில் 4,447 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் இருந்து தேர்வெழுதிய அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். சென்னையிலிருந்து தேர்வெழுதிய 172 மாணவர்களில் 104 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து தேர்வெழுதிய 7 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

Also Read : திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை! ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடந்த இந்தத் தேர்வை 17,78,725 மாணவ-மாணவிகள் எழுதினர். கடந்த 7ம் தேதி தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவை வெளியிட்டது.

இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி முதலிடமும், டெல்லியைச் சேர்ந்த வத்ஸா ஆஷிஸ் பத்ரா 2வது இடத்தையும் பிடித்தனர். இத்தேர்வில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 1.32 லட்சம் பேர் தேர்வெழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2020-ல் 57.44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2021-ல் 54.40 சதவீதமாகவும், நடப்பாண்டு 51.30 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.

Also Read : நேரடி படிப்புக்கு இணையானதா ஆன்லைன், திறந்தவெளி, தொலைதூர திட்டப் படிப்பு? பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பு!

நடப்பாண்டு தேசிய தர வரிசையில் முதல் 50 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். தமிழக மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 30வது இடத்தை பிடித்துள்ளார். ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 43வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry