நேரடி படிப்புக்கு இணையானதா ஆன்லைன், திறந்தவெளி, தொலைதூர திட்டப் படிப்பு? பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பு!

0
127

பல்கலைக்கழக மானியக் குழுவின் (திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் திட்டங்கள் மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள்) விதிமுறைகள், 2020 இன் விதிமுறை 22ன் படி முக்கிய அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டுள்ளது.

2035ல் உயர்கல்விக்கு செல்லும்  மாணவர்கள் 50 சதவீதமாக உயர்த்துவும், உயர் கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்களை சேர்க்கவும் புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. உயர்கல்வியின் ஒட்டுமொத்த தரத்தினை அதிகரிக்கும்  மிக முக்கிய கருவியாக திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி (Open and Distance Learning), இணைய வழிக் கல்வி (Online learning) இருக்கும் என்று புதிய தேசியக் கல்விக் கொள்கை அடையாளம் கண்டுள்ளது. அந்த வகையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

Also Watch: Flu காய்ச்சலுக்கும் COVID-க்கும் என்ன வித்தியாசம்? – Dr. Subramanian Swaminathan Explains

அதன் அடிப்படையில் ஆன்லைன் படிப்புகள் மற்றும் தொலைதூர படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், ஆன்லைன் வழியில் படிக்கக்கூடிய படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில், பல்கலைக்கழக மானிய குழு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் ஆன்லைன், தொலைதூர கல்வி, நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை. அனைத்து டிகிரி பட்டங்களும் ஒரே மதிப்புடையது தான் என யுஜிசி செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அறிவித்துள்ளார்.

Also Read : TET தேர்வு சரி; NEET தேர்வு தவறா? டெட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்குமா? வேல்ஸ் பார்வை!

இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழல்களை உருவாக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, பல் நுழைவு வெளியேறுதல் (Multiple Entry and Exit), விருப்பதெரிவு அடிப்படையிலான தரமதிப்பீடு அமைப்பு முறை (Choice based Credit System) போன்ற முன்னெடுப்புகளும் இதில் அடங்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry