அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு! எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அமல்படுத்தியதால் மக்கள் அதிருப்தி!

0
300

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய திட்டத்தின் படி 100 யூனிட் இலவசம் மின்சாரம் வேண்டாம் என நினைப்பவர்கள் மின்சார வாரியத்துக்கு எழுதிக் கொடுக்கலாம். 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.27.50 என இரண்டு மாதங்களுக்கு சேர்த்து ரூ.55 கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 யூனிட் பயன்படுத்தினால் 145 ரூபாய். 400 யூனிட் பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு சேர்த்து கூடுதலாக 295 கட்டணம் வசூலிக்கப்படும். 500 யூனிட் 595 ரூபாய். 700 யூனிட் 580 ரூபாய். 800 யூனிட் 790 ரூபாய். 900 யூனிட் வரைக்கும் ரூ.1,130 கூடுதலாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Also Read : நேரடி படிப்புக்கு இணையானதா ஆன்லைன், திறந்தவெளி, தொலைதூர திட்டப் படிப்பு? பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பு!

மேலும் குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-2027-ம் ஆண்டு வரை இந்த புதிய மின்சார கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற  பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாட்டில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry