வெளிப்படைத் தன்மை, நேர்மை அவசியம்! காங். தலைவர் தேர்தல் குறித்து எம்.பி.க்கள் கடிதம்!

0
99

கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் தேவை என சசி தரூர், கார்த்தி சிதம்பரம் உள்பட ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சசி தரூர், கார்த்தி சிதம்பரம், ப்ரத்யூதி போர்டோலோய், அப்துல் காலீக், மனீஷ் திவாரி ஆகியோர் கடந்த 6ம் தேதி மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில், நாங்கள் வாக்காளர் பட்டியலைக் கேட்பதற்கு பல தவறான கற்பிதங்கள் எழுவது துரதிர்ஷ்டவசமானது, வேட்புமனு தாக்கலுக்கு முன்னராக மத்திய தேர்தல் குழு, மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து யாருக்கெல்லாம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அதிகாரம் வழங்கப்படுகிறது என்ற விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Also Read : அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு! எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அமல்படுத்தியதால் மக்கள் அதிருப்தி!

இந்தப் பட்டியலில் யாருக்கு வேட்பாளரை பரிந்துரைக்கும் அதிகாரமும், யாருக்கெல்லாம் வாக்களிக்கும் அதிகாரமும் இருக்கிறது என்பது தெரியவரும். ஒருவேளை தேர்தல் குழுவுக்கு
இதை பகிரங்கமாக வெளியிடுவதில் ஏதேனும் தயக்கம் இருந்தால் அந்தத் தகவலை வாக்காளர்களுக்கும், போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்குமாவது ரகசியமாக தெரிவிக்கலாம்.

ஏனெனில், தேர்தலில் போட்டியிடுபவர்களும், வாக்காளர்களும் நாட்டில் உள்ள 28 மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கும், 9 யூனியன் பிரதேச கட்சி அலுவலகங்களுக்கும் நேரில் சென்று வாக்காளர்கள் விவரங்களை அறிவது சாத்தியமற்றது. நியாயமான நேர்மையான வெளிப்படையான தேர்தல் நடைமுறையை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Also Read : எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!

ஜி23 குழுவில் இடம்பெற்றுள்ள சசி தரூர், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்தக் கடிதம் வெளியாகியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்தக் கடிதம் கவனம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலை அக்டோபர் இறுதிக்குள் நடத்தி முடிக்க ஜெய்ப்பூர் சிந்தனைக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்பட்ட நிலையில், “நான் காங்கிரஸ் தலைவராகிறேனா இல்லையா என்பது தேர்தல் நடக்கும்போது உறுதியாகிவிடும். அதுவரை காத்திருங்கள். அந்த நேரம் வரும்போது நீங்களே அறிவீர்கள். அப்போது ஒருவேளை நான் தேர்தலில் தலைவர் பதவிக்கு நான் போடியிடாது இருந்தேன் என்றால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்” என்று ராகுல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry