அதிமுக அலுவலக சீல் அகற்றம்! ஈபிஎஸ் தரப்பிடம் சாவி ஒப்படைப்பு! தீவிர போலீஸ் பாதுகாப்பு!

0
208

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

‘சீலை அகற்றி அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தர வேண்டும். பாதுகாப்பு கருதி ஒரு மாத காலத்துக்கு கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லக்கூடாது,’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Also Read : சீலை அகற்றி சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும்! கட்சி அலுவலக வழக்கில் ஐகோர்ட் அதிரடி!

இந்த நிலையில் கோட்டாட்சியர் , வட்டாட்சியர் தலைமையில் போலீஸ் பாதுகாப்போடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் சீலை அகற்றினார். பின்னர் தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த மேலாளரிடம் அவர் வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக அலுவலக பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry