டைம் முடிஞ்சிடிச்சி! நாட்டை விட்டு கிளம்புங்க..! கோத்தபயவை விரட்டும் சிங்கப்பூர் அரசு!

0
192

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்ச சுரங்கப்பாதை வழியாக தப்பி விமானம் மூலம் மாலத்தீவுக்குச் சென்றார். ஆனால், அங்கு அவர் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கோத்தபய நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது.

இதன் காரணமாக சவுதி விமானத்தில் கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார். அங்கு கோத்தபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் 15 நாட்களுக்கு மட்டுமே தங்க சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசா காலம் நீடிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கோத்தபய ராஜபக்சவிற்கு அமெரிக்காவும் விசா வழங்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry