அதிமுக தலைமை அலுவலக விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுத்தாக்கல்!

0
51

அதிமுக தலைமை அலுவலகம் விவகார வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த மாதம் 11-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையை சேதப்படுத்தினர்.

அதிமுக தலைமையகம் முன்பு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீஸார், லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதன் சாவி வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வழக்கு தொடர்ந்தனர்.

FILE IMAGE

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் அதிமுக தலைமைக்கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்பதற்காக கேவியட் மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry