நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதா? கொந்தளிக்கும் விவசாய சங்கங்கள்!

0
505

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது. தற்போது திடீரென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதை தனியாருக்கு அனுமதி வழங்கி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

16 நவீன அரிசி ஆலைகளில் தனியார்கள் மூலம் கொள்முதல் செய்து அரவை செய்து அரிசியாக அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி மேற்கொண்டு வருவது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

பி.ஆர். பாண்டியன்

தமிழகத்தில் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவே தமிழக முழுமையிலும் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்வதையே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

Also Watch : அதானியுடன் திமுக கூட்டு | Nirmala Sitharaman Reply to DMK

இச்செயல் விவசாயிகளுக்கு மட்டுமின்றி கருணாநிதிக்கும் செய்கிற துரோகமாகும் என்பதை உணர வேண்டும். சட்டமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்காமல், அரசியல் கட்சிகள், விவசாயிகளுடைய கருத்தை கேட்டறியாமல், தன்னிச்சையாக மறைமுகமாக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கொள்முதலை கைவிட்டு இருப்பதை திரும்பப்பெற தமிழக அரசு முன்வர வேண்டும்.

Also Read : மோசடிப் புகாரில் தனியார் நிதி நிறுவனம்! 21 இடங்களில் அதிரடி ரெய்டு! உரிமையாளர் வீட்டுக்கு சீல்!

காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரால் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வாழை, குறுவை நெல் நீர் சூழ்ந்து அழிவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். தற்போது குறுவைக்கான காப்பீடு திட்டத்தை தமிழக அரசு கைவிட்டிருக்கும் நிலையில், அதற்கான மகசூல் இழப்பை கணக்கில் கொண்டு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்.” இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry