வரும் 24-ந் தேதி ‘வலிமை’ ரிலீஸ்! தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு! குஷியில் அஜித் ரசிகர்கள்!

0
227

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்தத் திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் ‘வலிமை’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 31-ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. அதில் ‘வலிமை’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ‘வலிமை’ திரைப்படம் குறித்து படத்தயாரிப்பாளர் போனி கபூர் புதிய அப்டேட் வெளியிட்டார். அதில் வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 13-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுதும் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 50 சதவீத இருக்கையுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளித்தது தமிழக அரசு. இதையடுத்து, `வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், ‘வலிமை’ திரைப்படம் தமிழ் உட்பட 4 மொழிகளில் இந்தியா முழுதும் வரும் 24-ம் தேதி வெளியிடப்படும் என்று போனி கபூர் அறிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry