மதம் மாற வற்புறுத்தும் ஆசிரியர்கள்! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்!

0
311

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கீழ குத்தபாஞ்சான் கிராமத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் சிலர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு மாணவர்களிடம் அழுத்தம் கொடுப்பதால், தங்கள் குழந்தைகளை அனுப்பப் போவதில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக உள்ளிருப்பு தர்ணாவில் ஈடுபட்டனர். குத்தபாஞ்சான் கிராமத்தில் 1 -5ம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர், அங்கு படிக்கும் தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிக்கின்றனர். எனவே அந்தப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க விரும்பவில்லை என பெற்றோர்கள் தெரிவித்தனர். மாணவ, மாணவிகள் சுமார் 165 பேரை பள்ளிக்கு அனுப்ப அவர்களது பெற்றோர் மறுப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

7 ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் தாயார் தேன்மொழி IANS செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “கடந்த ஆண்டு எங்கள் மதம் மற்றும் சாதியைப் புறக்கணித்து, கிறிஸ்தவ மதத்தைத் தழுவுமாறு சில ஆசிரியர்கள் என் பிள்ளைக்கு அழுத்தம் கொடுத்தனர். அதனால் எனது மகளை அந்தப் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். மதம் மாற அழுத்தம் தருவது பற்றி கல்வித்துறையிடம் கடந்த ஆண்டே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பெற்றோர் போராட்டம் நடத்துவதாக அவர் கூறினார்.”

கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். எங்கள் கிராமத்துக்கென அரசுப் பள்ளி வேண்டும் என பெற்றோர் தெரிவிக்கின்றனர். மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பள்ளி மீது பெற்றோர் மதமாற்ற குற்றச்சாட்டை முன்வைத்ததைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. கீழ குத்தபாஞ்சான் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆதிதிராவிடர் அதிகம் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியின் வார்டன் மற்றும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்துவதாகவும், அதை எதிர்த்தபோது உடல் ரீதியான தண்டனை வழங்கப்பட்டதாகவும், கழிவறைகளை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அந்த மாணவி கூறியிருந்தார்.

GETTY IMAGE

கன்னியாகுமரியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஒரு பெண் ஆசிரியை வகுப்பில் கிறிஸ்தவ மதத்தைப் புகழ்ந்தும், இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் இழிவுபடுத்தியதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் பள்ளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மற்றொரு ஆசிரியையுடன் சேர்ந்து தங்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு அந்த ஆசிரியை வற்புறுத்துவதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் மிஷனரிகளுக்கு ஆதரவான அரசு அமையும் போதெல்லாம் இந்துக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry