சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரால், கரூரில் சாலை ஓரத்தில் நடப்பட்ட மரங்கள் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, அதைச் சுற்றி தார் சாலை அமைத்து, மரங்களை அழிக்க திமுக அரசு நிர்வாகம் சதிசெய்வதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Also Read : 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்! இதுதான் சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? ஈபிஎஸ் கடும் கண்டனம்!
தமிழக அளவில் அதிகம் வெயில் பதிவாகும் மாவட்டங்களில் கரூரும் ஒன்றாகும். எனவே, மாறிவரும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.ஆர்.வி. அறக்கட்டளை சார்பில் ‘கானகத்திற்குள் கரூர்’ என்கின்ற திட்டத்தினை உருவாக்கினார்.
இதுவரை நடப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களுக்கு, அந்த அறக்கட்டளை மூலம் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரூரின் பிரதான சாலையான, கரூர் – கோவை சாலை சீரமைக்கும் பணி சில தினங்களாக நடைபெற்று வருகிறது. கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் இருந்து ஏற்கனவே சாலைகள் நன்றாக உள்ளன. ஆனால், இரவோடு இரவாக நன்றாக இருந்த தார்சாலைகளை பறித்துவிட்டு புதிதாக சாலை அமைத்து வருகின்றனர்.
சாலைக்காக பறிக்கப்பட்ட இடங்கள் மட்டுமின்றி, எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பில் சாலை ஓரங்களில் நடப்பட்ட மரங்களின் மீதும், அதைச்சுற்றியும் தார் மெழுகி சாலை அமைக்கின்றனர். அதாவது மரங்கள் வளரக்கூடாது என்ற நோக்கில், சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சுற்றியும் தார் சாலை அமைத்துள்ளனர். சில இடங்களில் சாலைகளை சமன்படுத்தாமல் விட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
திமுக அரசு நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, சமூக ஆர்வலர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சாமானிய மக்கள் நலக்கட்சியின் பொதுச்செயலாளர் குணசேகரன், சமூக ஆர்வலர் சந்திரசேகரன் ஆகியோர், “வேர் பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு மரங்களைச் சுற்றி தாரைக் கொட்டி சமன் செய்துள்ளனர். இதனால் மரங்கள் வளர்வதற்கு தேவையான தண்ணீர் வேர்களுக்கு செல்ல வழி இல்லாமல் மரம் காய்ந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது.
மரத்தைச் சுற்றி மெழுகப்பட்டுள்ள தாரை அகற்றி தண்ணீர் ஊற்றுவதற்கு ஏதுவாக ஒப்பந்ததாரர் செய்து கொடுக்க வேண்டும். பல மரங்களின் கிளைகளை இரவோடு இரவாக வெட்டி போட்டுள்ளனர். ஏற்கனவே, போடாத ரோட்டிற்கு ரூ.3 கோடி பில் பாஸ் செய்த ஆட்சி என்ற ஆதாரப்பூர்வ குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலரை அரசு சஸ்பெண்ட் செய்தது.
கரூரை கலக்கும் மர அரசியல்! முகம் சுளிக்கும் சூழல் ஆர்வலர்கள்! #karur @OfficeofminMRV pic.twitter.com/jOgeBSuaBO
— VELS MEDIA (@VelsMedia) August 25, 2022
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களோடு இணைந்து, முன்னாள் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பழிவாங்கும் நோக்கில், அவர் வைத்து பராமரித்துவரும் மரங்களை அழிக்க நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Also Read : இத யூஸ் பண்ணவே பண்ணாதீங்க! எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!
மரங்கள் வெறும் நிழல் தருவது மட்டுமின்றி, பறவைகளின் வாழ்விடமாகவும், பிராணவாயு உற்பத்தி செய்யும் மையமாகவும் விளங்குகின்றன. எனவேதான், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ஒருபுறம் மரங்கள் வெட்டப்பட்டாலும், அவற்றை வளர்ப்பதன் அவசியம் குறித்து தொடர் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தார் ஊற்றி மரங்களை பட்டுப்போகச் செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்” இவ்வாறு அவர்கள் கூறினர்.
– ஆனந்தகுமார், செய்தியாளர் – கரூர்
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry