திருநீறு நீக்கப்பட்ட வள்ளலார் படம்! வரலாற்றை திருத்தும் முயற்சி? திமுகவுக்கு எதிராக கொந்தளிக்கும் ஆன்மிகவாதிகள்!

0
212

வள்ளலாரின் அடையாளமான திருநீற்று பட்டை இல்லாமல் திருவுருவச்சிலை, பேனர்கள் வைத்து, தாங்கள் இந்து ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் தான் என்பதை திமுக அரசு பகிரங்கமாக பறைசாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

வள்ளலாரின் 200வது பிறந்த நாள்; தர்மசாலை துவக்கி156 ஆண்டுகள்; அவர் ஏற்றிய தீபத்திற்கு, 152 ஆண்டுகள் ஆகியவற்றை இணைத்து, வள்ளலார் முப்பெரும் விழாவை, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஓராண்டு நடத்த, அரசு தீர்மானித்தது. அதற்காக தனி குழுவும் அமைத்தது.

Also Read : பரந்தூரில் விமான நிலையம்! பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு!

வள்ளலார் முப்பெரும் விழாவை, கடந்த 5-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இவ்விழாவில் அவர் பேசும்போது, ‘தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல. அதை அரசியலுக்கும், சொந்த சுயநலத்திற்கும், உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு எதிரானது’ என்றார்.

இந்த விழாவில் வைக்கப்பட்ட வள்ளலார் சிலை, பேனர்களில், திருநீற்று பட்டை இல்லாமல் இருந்தது. இது, தி.மு.க.,வின் ஆன்மிகத்திற்கு எதிரான போக்கை காட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற சொன்ன வள்ளலாருக்கே திருநீற்றை அழிக்க பார்க்கின்றனர் என்றால், சாதாரண மக்கள் எம்மாத்திரம்? என சமூக ஊடகங்களில் ஆன்மிகவாதிகள் கேட்கின்றனர்.

Also Read : கவனிக்காத பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்தை ரத்து செய்யலாம்! பெற்றோருக்கு உரிமை உள்ளதாக ஐகோர்ட் தீர்ப்பு!

வள்ளலாரின் அடையாளமே அவரின் திருநீறு பட்டைதான். அதை அழித்து, விழா எடுத்து இரட்டை வேடம் போடுவது ஏன்? என்றும் அவர் வினவுகின்றனர். வள்ளலார் சுத்த சைவ மார்க்கத்தை சேர்ந்தவர். அவர் நெற்றியில் திருநீறு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. அதை அழித்து வெளியிட்ட இவர்கள், திருவள்ளுவருக்கு செய்தது போல துரோகத்தை வள்ளலாருக்கும் செய்துள்ளனர் என்ற குரலும் எழுந்துள்ளது.

இதனிடையே, பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான ஷோபனா ரவி தனது முகநூல் பக்கத்தில், ‘திருநீறு இல்லாத வள்ளலார் படத்தைப் பார்த்தால் 40 வருடங்களுக்கு முன்னர் வரை வீடுகளில் வளைய வந்த பிராமண விதவைகளைப் போல் இருக்கிறது. அவர் விபூதியை அழித்தவர்களுக்கு நான் மானசீகமாக நாமம் போட்டுப் பார்க்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry