கவனிக்காத பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்தை ரத்து செய்யலாம்! பெற்றோருக்கு உரிமை உள்ளதாக ஐகோர்ட் தீர்ப்பு!

0
110

சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். ஆனால், வயதான காலத்தில் தங்களைக் கவனிக்காமலும், மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்துப் பெற்றோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா தீர்ப்பளித்தார். அப்போது, நகைகளை விற்றும், சேமிப்புகளைக் கரைத்தும், தங்கள் மருத்துவச் செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என விமர்சித்த நீதிபதி, கடந்த 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, தங்களை கவனிக்காத குழந்தைகளுக்குச் சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யப் பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.

Also Read : பரந்தூரில் விமான நிலையம்! பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு!

மேலும், தந்தை மகற்காற்றும் உதவி என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய நீதிபதி, சமுதாயத்தின் பொதுப் பண்புகளை இந்த குறள் எதிரொலிப்பதாகவும், தற்போது சமூகம் இந்த விழுமியத்தின் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry