சலூன் தொழிலிலும் கால்பதித்த ‘அமேசான்’! வாடிக்கையாளர்களை கவரும் நவீன தொழில்நுட்பங்கள்!

0
28

இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் லண்டனில் சலூன் கடையைத் திறந்துள்ளது. இதன் மூலம் முடித்திருத்தும் தொழிலிலும் அமேசான் கால்பதித்துள்ளது.

லண்டன் நகரின் பிரஷ்ஃபீல்ட் தெருவில் தமது முதல் சலூன் கடையை அமேசான் நிறுவனம் அமைத்துள்ளது. 1,500 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களைக் கொண்டவகையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்தக் கடையில், வாடிக்கையாளர்கள் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டிக் கொள்வதற்கு வசதியாகஅகுமேட்டட் ரியாலிட்டிபோன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன்மூலம், முடி வெட்டிக்கொள்ள வருபவர்கள் எந்தவகையான ஹேர் ஸ்டைலை விரும்புகின்றனர் என்பதை முன்கூட்டியே துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். மேலும்,அழகுசாதனப் பொருள்கள் குறித்த முழு விவரங்கள் ஒரு ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் காண்பிக்கப்படும், அதில் தங்களுக்கு தேவையான பொருள்களை, வாடிக்கையாளர்கள் QR Code-ஐ பயன்படுத்தி பெற்றுக்கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, அமேசானில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் இந்த சலூன் செயல்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னர் இந்தத் தொழிலை அமேசான் விரிவுபடுத்தக்கூடும் எனத் தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry