கோவாக்சின் 3-ம் கட்ட சோதனை முடிவு வெளியீடு! 81% பலன் அளிப்பதாக அறிவிப்பு! மரபணு மாற்ற வைரசையும் அழிக்கும் வல்லமை!

0
13

கோவிட்-19 பெருந்தொற்றை தடுப்பதற்கான கோவாக்சின் தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையில் 81% செயல்திறன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை அழிக்கும் திறனும் கோவாக்சினுக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா தடுப்புக்காக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள் எனப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டகோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த மார்ச் 1-ம் தேதி முதல், முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வரும் மே1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், ICMR உடன் இணைந்து ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 25,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சோதிக்கப்பட்டது. இதில் 81 சதவிகித பலன் அளிப்பதாக இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 78% பலன் கிடைப்பதாக பரிசோதனையின் முடிவு தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சார்ஸ்கோவி 2 உள்பட இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் கோவாக்சின் தடுப்பூசிக்கு உள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டன், பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரசையும், இரட்டை உருமாறிய கொரோனா வைரசையும் கோவாக்சின் அழிப்பதாக ICMR தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry