செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர், வேலை வாய்ப்புகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஓர் மனிதனை போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் அனுமதிக்கிறது. மனிதனை போலவே ஓர் விஷயத்தை கணிப்பது மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, அதிக அளவிலான தகவல்களை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கலாம்.
Also Read : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமாக இருந்த திருவண்ணாமலை! சோழர் காலத்து கல்வெட்டுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்!
கணினியை கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algoritms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது. அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது.
அத்துடன் பயனாளர்களுக்கு எந்த பதிவைகளை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இத்தொழில்நுட்பம் உதவலாம்.
வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய அமேசான் நிறுவனத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. அத்துடன் போலி மதிப்பீடுகளை களையவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
ChatGPT மற்றும் snapchat’s My AI இரண்டும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சக்தி வாய்ந்த செயலிகளாக கருதப்படுகின்றன. ChatGPT மற்றும் snapchat’s My AI ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைக்கு சிறந்த உதாரணங்களாக கூறப்படுகின்றன.
அத்துடன் செயற்கை நுண்ணறிவானது, ‘சாட்பாட்’ எனப்படும் கணினி மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது எழுத்து வடிவ உரையாடல் வழியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறது. கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கதைகள் சொல்லவும், கணினி மென்பொருளை எழுதவும் இந்த செயலிகளை பயன்படுத்தலாம். ஆனால் சில நேரங்களில் பயனர்களுக்கு இது தவறான முடிவுகளை அளிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Also Read : செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் டிராஃபிக் சிக்னல்! சென்னையில் நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறை!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நிர்வகிக்க சில விதிகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இருந்தாலும் ஏஐ தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்துகின்றனர்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து வரும் மையம், கடந்த மாதம் ஓர் முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. 25க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்புடன் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, ‘ஏஐ’ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.
சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கில் தவறான தகவல்களை உருவாக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அத்துடன், இத்தொழில்நுட்பத்தால் மனிதர்களை விட இயந்திரங்கள் புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்றும், அத்தகையதொரு மோசமான நிலை மனித குலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ள கடுமையான சட்டங்கள் தேவை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்ப அமைப்பு வலியுறுத்துகிறது. குறிப்பாக, ‘கடன் விண்ணப்பங்கள் மீது முடிவெடுப்பது போன்ற விஷயங்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் அது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் பாதிக்கும். தேர்தல் போன்ற முக்கியமான விஷயங்களில் இத்தொழில்நுட்பம் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும்’ என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது.
Also Read : சுவையான நஞ்சா அஜினோமோட்டோ? அதென்ன ‘சைனீல் ரெஸ்டாரன்ட் சின்ட்ரோம்’? THE HARMFUL EFFECTS OF AJINOMOTO!
ஏஐ தொழில்நுட்பம் உலகளாவிய பணி சூழலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டாலும், இதனால் எந்தெந்த வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் 300 மில்லியன் நபர்கள் தற்போது முழுநேரமாக செய்துவரும் பணிகளை, ‘ஏஐ’ தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றி அமைக்கும் எனவும், இந்தப் பணிகள் அனைத்தும் இயந்திரமயம் ஆக்கப்படும் என்றும் முதலீட்டு வங்கியான Goldman Sachs ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
இந்த எண்ணிக்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது அனைத்து விதமான பணிகளை மேற்கொண்டு வரும் மனிதர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்காகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாகம், சட்டம், கட்டடக் கலை உள்ளிட்ட துறைகள் சார்ந்த பணிகளுக்கு, ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளில் ஏற்கனவே ‘ஏஐ’ தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. மார்பக புற்று நோயை அடையாளம் காண தங்களுக்கு உதவும் வகையில் மருத்துவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். நுண்ணுயிர்கள் எதிர்ப்புக்கான புதிய மருந்துகளை (ஆன்டிபயாடிக்) கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பணிகளில் விஞ்ஞானிகள் இத்தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர்.
Featured Videos form VELS MEDIA
லோன் ஆப்பில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் சைபர் சட்ட நிபுணர்! Advocate Karthikeyan
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry