வார ராசி பலன்! தேடி வந்து கொடுக்கறாங்கன்னு கடன் வாங்கினீங்க..! இந்த ராசிக்காரங்க படித்துப் பார்க்காமல் கையெழுத்திடாதீங்க!

0
67
Weekly Horoscope: Check Astrological prediction from August 14th to 20th August 2023 | GETTY IMAGE

இந்த வார ராசிபலன் – ஆகஸ்ட் 14ல் இருந்து ஆகஸ்ட் 20வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

மேஷம் : அவசர புத்தி கொண்ட மேஷ ராசிக்காரர்களே, இதுவரை தனக்கு பிடித்த சிம்ம வீட்டில் இருந்த ராசிநாதன் செவ்வாய், 19ந்தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ராசிக்கு 6ல் ராசிநாதன் செவ்வாய் இருப்பதால் அடுத்த ஒன்றரை மாதம் உடல் நலனில் கவனமாக இருங்கள். உடலுக்கு ஒத்துவராத உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. செல்போன், கம்ப்யூட்டர் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதாகி செலவு கொடுக்கும். நீங்கள் சும்மா இருந்தாலும் வங்கிகள் சும்மா விடாது. நீங்கள் எவ்வளவு முயன்றாலும் கடன் கிடைக்காத நிலை மாறும். தற்போது வீடு தேடி வந்து கடன் கொடுப்பார்கள். ஈசியாக கிடைக்கிறதே என்பதற்காக இஷ்டத்திற்கு கடன் வாங்க வேண்டாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது உஷாராக இருப்பது நல்லது. நிலத்தை குத்தகைக்கு விடும் போது ஒப்பந்தங்கள், பத்திரங்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

ரிஷபம் : மென்மையான ரசனை கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, ராசிநாதன் சுக்கிரன் வக்கிரமாகி 3ல் உள்ளார். இளைஞர்களுக்கு இசை, பாடல், நடனம், நடிப்பு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய முயற்சிகள் மூலம் புகழடைவார்கள். அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். கனரக வாகனங்கள், இயந்திரங்கள் சார்ந்த தொழில், வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான வாரம். உயர்கல்வியில் மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும். எதையும் எளிதில் உள்வாங்கும் திறன் அதிகரிக்கும். இளைஞர்கள் படிப்பால் உயர்ந்த நிலையை அடைவார்கள். சிலருக்கு குழந்தைகள் வழியில் செலவுகளும், மனக்கவலையும் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை பெறுபவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

மிதுனம் : கலை நுணுக்கங்களில் கைதேர்ந்த மிதுன ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் 3ல் இருப்பதால் தொலைத்தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். நகைச்சுவை திறனால் வருமானம் ஈட்ட வழி பிறக்கும். டெக்னாலஜி சார்ந்த விஷயங்களில் தனி முத்திரை பதிப்பீர்கள். நீண்ட நாட்களாக முயற்சி செய்த அரசு ஒப்பந்தம் தற்போது கிடைக்கும். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அறிமுகமாவார்கள். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். நீர்பாசன துறையில் வேலை செய்பவர்கள், குடிநீர் விநியோகம், வாட்டர் கேன் சப்ளை தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இரண்டாவது திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். அண்ணன், அக்கா, சித்தப்பா உறவுகள் வழியில் கருத்து வேறுபாடு ஏற்படும். ரசாயன பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் உள்ளவர்களுக்கு அனுகூலமான வாரம். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

கடகம் : மனோதிடம் கொண்ட கடக ராசிக்காரர்களே, ராசிநாதன் சந்திரன் ஒளியை இழந்து அமாவாசை அமைப்பில் இருப்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது. உடனுக்குடன் முடிவெடுத்து விரைவாக எந்தவொரு விஷயத்தையும் செய்ய வேண்டாம். நிதானமாக சிந்தித்து பொறுமையாக முடிவெடுத்து செயல்படுங்கள். பெற்றோருடன் வாக்குவாதம், மனக்கசப்பு ஏற்படும். 18ந்தேதிக்கு பிறகு சூரிய பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். தன ஸ்தான அதிபதியான சூரியன் ஆட்சி பெறுவதால் வருவாய் தடையின்றி கைக்கு வந்து சேரும். எலக்ட்ரானிக் கடை, மூக்கு கண்ணாடி விற்பனையகம், தங்க நகை பட்டறை தொழில் செய்பவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அரசியல்வாதிகள், மின்சார வாரியத்தில் வேலை செய்பவர்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்களுடைய செல்வாக்கு உயரும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

சிம்மம் : நிர்வாக திறமை அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, ஆடி மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியன் ராசிக்கு 12ல் இருந்ததால் தன்னம்பிக்கை, மன தைரியம் குறைந்து இருக்கும். தந்தையால் செலவு, வருவாயில் தடை என அனைத்து வழிகளிலும் பிரச்னைகளை சந்தித்த உங்களுக்கு 18ந்தேதிக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறும். ஆவணி மாதம் முழுவதும் சாதகமான பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். எதையும் சமாளித்து விடலாம் என்ற தன்னம்பிக்கை, தைரியம் உண்டாகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நிர்வாக திறமை, தலைமை பண்பு வெளிப்படும். முக்கிய பதவிகள், பொறுப்புகள் உங்களை தேடி வரும். வாய்ப்புகளை வேண்டாம் என்று புறந்தள்ளாமல், ஏற்று கொண்டு திறமையாக செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். ராசியை சனிபகவான் பார்ப்பதால் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களை கெளரவமாக நடத்துங்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

கன்னி : நகைச்சுவை குணம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் 12ல் இருந்தாலும் தனக்கு பிடித்த சிம்ம வீட்டில் இருப்பது சிறப்பு. தந்தை வழியில் ஆதாயம் உண்டு. அரசு சார்ந்த ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். தந்தையின் தொழில், வியாபாரம், மேட்ரிமோனி மையம் நடத்துபவர்களுக்கு அனுகூலமான வாரம். ராசியில் செவ்வாய் இருப்பதால் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். சகோதரர்கள், மைத்துனர் உடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். நண்பர்களுக்கு உதவி செய்யும் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். கடனுக்கு ஜாமின் கையெழுத்து போடுவது, நண்பனின் பிரச்னையை தீர்த்து வைக்க முயன்று நீங்கள் பிரச்னையில் சிக்க நேரிடும் என்பதால் கவனமாக இருங்கள். சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

துலாம் : எதை எடுத்தாலும் வியாபார கண்ணோட்டத்தில் பார்க்கும் துலாம் ராசிக்காரர்களே, ராசியில் கேது இருப்பதால் தனிமையை விரும்புவீர்கள். வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கஷ்டப்பட்டு உழைத்தாலும் கிடைக்கின்றன லாபம் சொற்ப அளவில் இருக்கும். குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் செலவு செய்ய நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறை, அழகு நிலையம், ஜவுளி வியாபாரம், தங்கும் விடுதி வைத்திருப்பவர்களுக்கு லாபகரமான வாரம். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களிடம் பழகும் போது சற்று கவனமாக இருங்கள். 14, 15, 16 ஆகிய தேதிகளில் பெற்றோரை அனுசரித்து செல்லுங்கள். தந்தையின் தொழிலை செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

விருச்சிகம் : போட்டி என்று வந்து விட்டால் இறுதி வரை போராடும் குணம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இதுவரை ராசிக்கு 10ல் இருந்த ராசிநாதன் செவ்வாய் அடுத்த ஒன்றரை மாதம் 11ம் இடத்தில் இருந்து பலன்களை தரப் போகிறார். வெற்றி ஸ்தானமான 11ல் ராசிநாதன் இருப்பது என்றாலும் கன்னி அவருக்கு பிடிக்காத உபய வீடு என்பதால் நல்லது கெட்டது என்று கலப்பு பலன்கள் உண்டாகும். ஒப்பந்தம், ஆவணங்கள், பத்திரம், தொலைத்தொடர்பு, இணையதளம் போன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள். படித்து பார்க்காமல் எதிலும் கையெழுத்திட வேண்டாம். இளைய சகோதரர்கள், சித்தப்பா உறவுகள் வழியில் நன்மைகளும் உண்டாகும் அதேநேரம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். 19, 20 ஆகிய தேதிகளில் குடும்பத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். கடன் விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. குழந்தைகள் சொல் பேச்சை கேட்கவில்லையே என்ற ஆதங்கம் வெளிப்படும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

தனுசு : சுய ஒழுக்கம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, கஷ்டப்பட்டு பிள்ளையை படிக்க வைத்தோம் ஆனால் நல்ல நிரந்தரமான வேலை இல்லையே என்று ஏங்கி கொண்டிருந்த பெற்றோருக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். பிள்ளைகள் வேலைக்கு சென்று கைநிறைய சம்பாதிப்பதை பார்த்து பெருமை அடைவீர்கள். வேகமாக செய்யக்கூடிய வேலை, காய்கறி, பழங்கள், பால் பொருட்கள் விற்பனையில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இருப்பினும் கூடுதல் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அரசு சார்ந்த விஷயங்கள் சாதகமாக அமையும். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சற்று கவனமாக இருங்கள். 18ந்தேதிக்கு பிறகு தந்தை வழியில் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து கிடைப்பதில்லை இருந்த தடைகள் விலகும். தாயார் மற்றும் வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

மகரம் : உழைப்பின் மூலம் கிடைப்பது மட்டுமே நிலைக்கு என்பதை உணர்ந்த மகர ராசிக்காரர்களே, ராசிநாதனும் தன ஸ்தான அதிபதியான சனிபகவான் ஆட்சி பெற்று இருப்பதால் காற்றாலை மின் உற்பத்தியில் உள்ளவர்கள், விமான நிலையத்தில் வேலை செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. இயற்கை கனிம வளங்கள் வழியில் ஆதாயம் உண்டு. அரசு ஒப்பந்தங்கள், ஒப்புதல்கள் கிடைக்கும். சாஸ்திர சம்பிரதாயங்களை மதித்து நடந்து கொள்வீர்கள். பேச்சில் நிதானம் தேவை. நல்லதே செய்தாலும் வாழ்க்கை துணை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்களே என்ற கவலை உங்களை வாட்டி எடுக்கும். வேலை செய்யும் இடத்தில் வீண் பேச்சை தவிர்த்து விடுங்கள். புதிய வேலை, இட மாறுதலுக்கு முயற்சி செய்பவர்கள் சற்று நிதானமாக இருப்பது நல்லது. 16ந்தேதி பிற்பகல் தொடங்கி 18ந்தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் நீண்ட தூர பயணங்களை தள்ளிப்போடுவது நல்லது.

கும்பம் : குறுகிய மனம் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது. காலில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் சற்று எச்சரிக்கை தேவை. நண்பர்கள், உறவினர்களுக்கு பண உதவி, கடனுக்கு ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்த்து விடுங்கள். சொத்தை பங்கு பிரிப்பதில் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும் என்பதால் அனைத்தையும் பேசி தீர்த்து கொள்ளுங்கள். சிறிது அவசரப்பட்டாலும் வம்பு, வழக்கு வரை பிரச்னைகள் நீளும். ஆடி மாதம் முழுவதும் வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. திருமண முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். மனதிற்கு பிடித்த வரன் அமைந்தாலும் அதில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். 18ந்தேதி பிற்பகல் தொடங்கி 20ந்தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் தொழிலில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.

மீனம் : இயல்பாக சிந்தித்து செயல்படும் மீன ராசிக்காரர்களே, ராசிக்கு 2ல் ராகு இருந்தாலும் குருபகவானுடன் இணைந்து உள்ளதால் சிறுசிறு மனக்கசப்புகள் இருந்தாலும் குடும்பத்தில் குதூகலமாக நிறைந்து காணப்படும். புகழ், அறிவாற்றல் மேலோங்கும். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அறிமுகம் கிடைக்கும். காதலர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். சிலருக்கு காதலில் தோல்வி ஏற்படும். தாயார் வழியில் ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும். இசை, பின்னணி பாடல் என கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். அழகு கலை நிபுணர்கள், உணவகம் நடத்துபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மாமன், அத்தை உறவுகளை அனுசரித்து செல்லுங்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், சக பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள். வார இறுதியில் தான் சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய வேலைகளை தாராளமாக செய்யலாம்.

தொடர்புக்கு :- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. தொடர்புக்கு : astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry