ஆளுநர் பாதுகாப்பு விவகாரம்! திமுக – அதிமுக – பாஜக இடையே கடும் மோதல்! என்ன சொல்கிறார் முதல்வர்!

0
157

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வந்து பின்னர் வெளிநடப்பு செய்தது.

சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் கார் மீதும், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீதும் கற்கள் மற்றும் கம்புகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களுக்கு போலீஸே பாதுகாப்பு கொடுத்தது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது” என்று கூறினார். பின்னர் பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றார். ஆளுநரின் வருகை அறிந்தும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்ட விவகாரம், ஆளுநருக்கு பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக  சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது, “போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநரின் பயணம் பாதுகாப்பாக இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டன என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதே உண்மை.

கவர்னருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்பதை நான் உறுதியோடு இந்த அவையில் பதிவு செய்கிறேன். கவர்னர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக இந்த அரசு அழைத்து சென்றிருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசியல் சட்ட பதவியில் இருப்பவர்களை காப்பாற்ற அவர்களுக்குரிய பாதுகாப்பை அளித்திட இந்த அரசுக்கு பொறுப்பு இருக்கிறது”

இந்நிலையில், சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஆளுநரை வைத்து அரசியல் செய்வது தமிழக முதல்வர் தானே தவிர பாஜக கிடையாது. ஆர்ப்பாட்டம் நடத்துவதாக 3 நாட்களாக சொன்னபோது அமைதியாக அதனை ஆதரித்தது திமுக. தற்போது என்னையும் பாஜகவையும் குற்றம்சுமத்தி நாங்கள் அரசியல் செய்வதாக கூறுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

Also Watch :- கவர்னர் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்~356ஐ நோக்கி திமுக நகர்கிறது | எஸ்.ஆர். சேகர், பா.ஜ.க.

நிறைய கொடிக்கம்பங்கள் ஆளுநரின் கான்வாய் மீது விழுந்துள்ளன. ஆளுநரின் கான்வாய் எப்படிச் சென்றது, அந்தக் காரை கொஞ்சம் விட்டிருந்தால், கால்வாய்க்குள் சென்றிருக்கும். போராட்டம் செய்கிறவர்களுக்கு சாலையின் ஓரத்திலேயே இடம்கொடுத்த போலீஸாரை இப்போதுதான் நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry