வகுப்பறையில் ஆசிரியரை அடிக்க முயற்சிக்கும் மாணவர்கள்! தகாத வார்த்தைகளால் மிரட்டல்!

0
576

திருப்பத்தூர் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில், ஆசிரியரை மாணவர்கள் அடிக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் அருகே மாதனூர் அரசு மேல்நிலைபள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இரு தினங்களுக்கு முன்பு திருப்புதல் தேர்வு நடைபெற்றுள்ளது. தாவிரவியல் ஆசிரியர் சஞ்சய்காந்தி கண்காணிப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது மாணவர்கள் இரண்டு பேர் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டியடி அடிக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதையடுத்து RDO விசாரணைக்குப் பிறகு 3 மாணரக்ள் சஸ்பெணட் செய்யப்பட்டுள்ளனர்.

இது போன்ற தொடர் சம்பவங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சட்டை பட்டனை கழட்டி விட்டு, புள்ளிங்கோ ஸ்டைலில் முடியுடன் ஏதோ சுற்றுலா போல பள்ளிக்குள் உலாவுவதை ஆசிரியர்கள் கண்டிக்கவே பயன்படுகின்றனர். ஒருவேளை ஆசியர்கள் கண்டித்தால், கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

தேனி மாவட்டம் தேவாரம் பள்ளியில், புத்தகம் கொண்டுவரச் சொல்லிய ஆங்கில ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார். அதேபோல், தேனி மாவட்டம் ஜி. கல்லுப்பட்டியில் மாணவர்கள் குழுவாக ஆசிரியர்களைக் கிண்டல் செய்துள்ளனர். இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர் கத்தியுடன் வகுப்புக்கு வந்து ஆசிரியரைக் குத்த முயன்றுள்ளார். போலீசார் முன்னிலையிலையே ஆசிரியர்ளுக்கு அந்த மாணவன் கொலை மிரட்டல் விடுத்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவன் ஒருவன் தலைமுடியை டிஸ்கோ கட்டிங் மாடலில் வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து பள்ளிக்கு இதுபோல் வரக்கூடாது என்றும் , தலைமுடியை ஒழுங்காக வெட்டிக் கொண்டு  வர வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார் .

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தலைமையாசிரியர் அலுவலகத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை உடைத்துள்ளான். மாணவனை வெளியே தள்ளிவிட்டு தலைமையாசிரியர் தனது அறை கதவை சாத்திய பிறகும், கண்ணாடி பாட்டில் மற்றும் மர கட்டையை கொண்டு அறைக் கதவை மாணவன் அடித்து உடைத்துள்ளான். பள்ளியிலேயே போலீஸார் அந்த மாணவனை விசாரித்தபோது நான் ரவுடிதான் என்று கூறினான்.

கரூர் மாவட்டம், தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர்,  ஒழுக்கமாக முடிவெட்டாமல் ரவுடி தோரணையிலும், சீருடை அணியாமலும் பள்ளிக்கு சென்றுள்ளார். உடற்கல்வி ஆசிரியர் அந்த மாணவரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் வெளியில் இருந்து நண்பர்களை அழைத்து வந்து பள்ளி வளாகத்தில் ஆசிரியரை மிரட்டியுள்ளார்.

விருதுநகரையடுத்த நரிக்குடியில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேனிலைப் பள்ளியின் +2 மாணவர்கள் இருவர், ஆங்கில ஆசிரியரை பிளாஸ்டிக் கத்தியைக் காட்டி கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர். சென்னையில் பள்ளி ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் மறந்துபோச்சா எனக் கூறி மாணவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலாக மாணவிகளோ நாங்களும் சளைத்தலைவர்கள் இல்லை என்று கூறும வகையில் 2 வீடியோக்கள் வெளியாகின. ஒன்றில் மாணவிகள் வட்டமாக அமர்ந்துகொணடு பீர் குடிக்கிறார்கள். மற்றொன்றில், ஓடும் பேருந்துக்குள் மானவிகள் பீர் குடிக்கும் வீடியோ. மாணவர் சமுதாயத்திடம் இருந்து காப்பாற்றுமாறு ஆசிரியர்கள் கோரும் நிலை ஏற்பட்டிருப்பது பெரும் இழுக்கு.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry