அரசியல் லாபத்துக்காக தியாகத்தை சிறுமைப்படுத்துவதா? மோடி அரசுக்கு சோனியா கண்டனம்!

0
37

சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்தும், கடந்த 1947ம் ஆண்டு நடந்த தேசப்பிரிவினை குறித்தும் பாஜக சார்பில் ஒருவீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் இந்தியப் பிரிவினை நடந்தபோது இருந்த காங்கிரஸ் தலைமை, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோரை குற்றம்சாட்டி இருந்தது.

அது மட்டுமல்லாமல் கர்நாடக அரசு சுதந்திரதினம் குறித்த விளம்பரத்தில் ஜவஹர்லால் நேரு குறித்த புகைப்படத்தை மட்டும் பிரசுரிக்காமல் தவிர்த்தது. இந்த இரு சம்பவங்களுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Also Read : ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்! பிரதமர் மோடி சுதந்திர தின உரை!

அந்தக் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“நண்பர்களே, கடந்த 75 ஆண்டுகளில் ஏராளமான விஷயங்களை நாம் சாதித்திருக்கிறோம். ஆனால் இன்று, சுயநலம் கொண்ட அரசு நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் மிகப்பெரிய தியாகத்தையும், தேசத்தின் புனிதத்தையும் எந்த விலை கொடுத்தேனும் சிறுமைப்படுத்துகிறது, இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

வரலாற்று உண்மைகளை தவறாகச் சித்தரிப்பதையும், மிகப்பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், அபுல் கலாம் ஆசாத் ஆகியோரைப் பற்றி அரசியல் லாபத்துக்காக பொய்யான தகவல்களை கூறுவதையும் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. வரலாற்று உண்மைகளை பொய்யாக்க இந்த தற்பெருமை பேசும் அரசு முயற்சிக்கிறது. அதன் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்க்கும்.

Also Read : அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு! தியாகிகள் ஓய்வுதியமும் அதிகரிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

சுதந்திர போராட்டத்தின்போது, இந்திய படையின் தியாகங்களை சிறுமைப்படுத்தும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடுகிறது. கடந்த 75 ஆண்டுகளில், அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சர்வதேச அரங்கில் இந்தியா தனது திறமையான குடிமக்களின் கடின உழைப்பால் அழியாத முத்திரையை பதித்துள்ளது.

தொலைநோக்குள்ள இந்த தலைவர்களின் கீழ், இந்தியா சுதந்திரமான, நியாயமான வெளிப்படையான தேர்தல்முறை ஆகியவற்றால் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா முன்னணி நாடு என்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளது. பன்முக மொழி, கலாச்சாரம், பிரிவுகளோடு எப்போதும் இந்தியா இருந்து வருகிறது. தனது பன்முக கலாசாரம் மற்றும் மொழிகள் ஆகியவற்றால் ஒரு போற்றத்தக்க நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.” இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry