தேசியக் கல்விக் கொள்கை புரட்சிகர முன்னெடுப்பு! காலனியாதிக்க கல்வி முறை வேண்டாம் என ஆளுநர் கருத்து!

0
95

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், “நம்முடைய நாட்டின் மேன்மைமிக்க வரலாற்றை, செறிவுமிக்க பண்பாட்டை, பெருமைமிக்க சாதனைகளையும் கொண்டாடுகிற நேரமிது.

இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, நேர்மை, அரசமைப்பு விழுமியங்கள், உள்நாட்டு அமைதி ஆகியவற்றைக் காப்பதில் தங்கள் இன்னுயிர் ஈந்த மாபெரும் வீரர்களுக்கும், நம்முடைய மனமார்ந்த நன்றியறிதலை இத்தருணத்தில் உரித்தாக்குகிறோம்.

உலகையே ஆட்டிப்படைத்த பெருந்தொற்றுக் காலத்தில், நம்முடைய மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் பணியில், நம்முடைய மருத்துவர்களும் செவிலியரும் பிற நலவாழ்வுப் பணியாளர்களும் அசாதாரணமான துணிவையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினர். இந்தப் பணியில் தங்களின் இன்னுயிர் ஈந்த மருத்துவர்க்கும் நலவாழ்வுப் பணியாளர்க்கும் நம்முடைய அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

Also Read : ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்! பிரதமர் மோடி சுதந்திர தின உரை!

வளர்ந்து கொண்டிருக்கும் நம்முடைய மக்கட்தொகைக்குப் போதுமான அளவில் மட்டுமில்லாமல், பிற நாட்டினருக்கும் உதவும் அளவில் நம்முடைய விவசாயிகள் உணவை உற்பத்தி செய்துள்ளனர். இத்தகைய சாதனை அளவு உணவு உற்பத்தியைத் தந்துள்ள நம்முடைய வேளாண் பெருமக்களை வாழ்த்தி வணங்குகிறோம்.

சமீப காலங்களில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் ஸ்டார்ட் – அப் அமைப்புகள், நம்முடைய இளைஞர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்தி, உலகையே வியப்பில் மூழ்கடிக்கின்றன. ஸ்டார்ட்-அப் சூழலில், உலகிலேயே முதன்மை இடத்தை இந்தியா வகிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ், இந்தியா முன்னோக்கி நடை போடுகிறது. ‘எல்லோருடனும், எல்லோருக்காகவும், எல்லோரின் முயற்சியாலும்’ என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்னும் மேன்மை காண்கிறது.

Also Read : அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு! தியாகிகள் ஓய்வுதியமும் அதிகரிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

எந்தவொரு நாடும் பெருமைமிக்கதாகத் திகழவேண்டுமெனில், அதன் குடிமக்கள், நன்கு கற்றவர்களாகவும் தக்க ஆற்றல் திறன் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும். மிக நீண்ட காலத்திற்கு நம்முடைய மக்களின் படைப்பு மற்றும் கற்பனாசக்தி அடக்கப்பட்டிருந்தது; காலனியாதிக்கக் கல்வி முறையின் வழியில், வெற்றுப் பட்டதாரிகளையும் மனப்பாடக் கிளிகளையும் மட்டுமே உருவாக்குகிற கல்வித் திட்டம் செயல்பட்டது. நம்முடைய கல்வித் திட்டத்தை நவீனப்படுத்தும் புரட்சிகர முன்னெடுப்பே, தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பதாகும்.

இதனால், ஆரோக்கியமான, நுண்ணறிவுமிக்க, ஆய்வு நுட்பம் செறிந்த, அனுபவக் கற்றல் வாய்ந்த, மிக முக்கியமாக, தன்னம்பிக்கை நிறைந்த குடிமக்கள் உருவாவார்கள். கல்வியிலும் கற்றலிலும் ஏற்கெனவே இருக்கும் சிறைக்கட்டுமானம் போன்ற பள்ளங்களைத் தகர்ப்பதன் மூலமும், நவீனமான மதிப்புக்கூட்டு முறையின் மூலமும், தங்களுக்குப் பிடித்தமான, தங்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ற வெவ்வேறு துறைகளையும் பாடங்களையும் கற்பதற்கு மாணாக்கர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இதனால், இன்றைய மட்டுமல்லாமல், நாளைய சவால்களையும் எதிர்கொள்கிற திறன்களை மாணாக்கர்கள் பெறுவார்கள்.

Also Read : அரசியல் லாபத்துக்காக தியாகத்தை சிறுமைப்படுத்துவதா? மோடி அரசுக்கு சோனியா கண்டனம்!

தேசிய (புதிய) கல்விக் கொள்கையில், கல்வியை (உயர் மற்றும் தொழிநுட்பக் கல்வி உட்பட), வட்டார மொழிகளில் கற்பது குறித்து வலியுறுத்தப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்மொழியின் பயன்பாட்டைப் புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. தமிழ் மொழி குறித்த பெருமிதத்தை மாணாக்கர்களிடையே மேம்படுத்தவும், பெருமிதத்தோடு தமிழைக் கற்பதை ஊக்குவிக்கவும், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அறிவியல்-தொழில்நுட்பக் கல்வியில் தமிழை அறிமுகப்படுத்தவேண்டும். மிக்க உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் புதிய கல்விக் கொள்கை மக்களால் வரவேற்கப்பட்டு இருப்பதையும் கல்வி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதையும் காண்கையில், மிகுந்த மனநிறைவு ஏற்படுகிறது”. இவ்வாறு ஆளுநர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry