Friday, March 24, 2023

மாணவர்களுக்கு வீட்டுப்பாடம்! பள்ளி அங்கீகாரம் ரத்தாகும் என கல்வித்துறை எச்சரிக்கை!

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அதிகமாக வீட்டுப் பாடம் கொடுப்பதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

1-ம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் 3 பாடங்கள்தான் இருக்க வேண்டும் எனவும், பல பள்ளிகளில் 8 பாடங்கள் வரை கற்றுக் கொடுப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. திறமையைக் கணக்கிட்டு மாணவர்களைப் பிரித்து பயிற்சி கொடுக்கும் நடைமுறையை ஒழிக்க உத்தரவிடுமாறும் அதில் கோரப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையம், ‘2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்கப்படாது. 3-ம் வகுப்பு வரை மூன்றே பாடங்கள்தான் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் தங்களது பாடத் திட்டத்தைப் பின்பற்றும் 18,000 சிபிஎஸ்இ பள்ளிகளும் இதைப் பின்பற்ற வேண்டும்’ என நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Also Read : தேசியக் கல்விக் கொள்கை புரட்சிகர முன்னெடுப்பு! காலனியாதிக்க கல்வி முறை வேண்டாம் என ஆளுநர் கருத்து!

இந்த விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், ‘1 மற்றும் 2-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. இந்த மாணவர்களுக்கு மொழி மற்றும் கணித பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். இதை மீறி தனியார் பள்ளிகள் செயல்பட்டால் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்து அந்த பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்திருந்தது.

Also Read : டியூஷன் எடுத்தால் நல்லாசிரியர் விருது கிடையாது! புதிய நெறிமுறைகளை வெளியிட்டது கல்வித்துறை!

இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது எனவும், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. வீட்டுப் பாடம் தரப்படவில்லை என்பதை அதிரடிப் படையினர் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles