Sunday, June 4, 2023

டியூஷன் எடுத்தா நல்லாசிரியர் விருது கிடையாது! புதிய நெறிமுறைகளை வெளியிட்டது கல்வித்துறை!

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பான கல்விப்பணி ஆற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுவதற்கு ஏற்கெனவே உள்ள விதிமுறைகளோடு கூடுதலாக புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி தனிப்பயிற்சி (டியூஷன்) எடுக்கும் ஆசிரியர்களை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Also Read : அரசுப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்! மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை முயற்சி!

விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட அளவில் சிஇஓ தலைமையில் ஐந்து பேர் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு மூலம், ஐந்து ஆண்டுகள் எந்த புகாருக்கும் இடம் தராத அளவிற்கு பணியாற்றியிருக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles