காங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக? பாஜக – திமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு என்கிறார் பொன்னார்!

0
2

தற்போது இருப்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி எனவும், சட்டமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற தேர்தல்  நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்றார். இப்போதுள்ளது நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. சட்டமன்ற  தேர்தலுக்கான கூட்டணி இனி அமைக்கப்படும்.

வரும் காலங்களில் கூட்டணி அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம்; இரண்டு கட்சியும் இல்லாமல் கூட  இருக்கலாம். நாங்களே கூட்டணி அமைக்கலாம். யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணி  உடன்பாட்டிற்கு பிறகு அறிவிக்க வேண்டிய விஷயம் என்றார். பொன்.ராதாகிருஷ்ணின் இந்தக் கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை பற்றவைத்துள்ளது.

தற்போது, அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், சமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பதால், திமுகவுடன் பாஜக கைகோர்க்கிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry