பிரதமர் பற்றி அவதூறு பேசிய எஸ்றா சற்குணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தமிழக அரசு உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் வேல்ஸ் மீடியாவுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், சென்னையில் திமுக ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், பிரதமர் பற்றி தரம் தாழ்ந்த முறையில் எஸ்றா சற்குணம் பேசியதை கண்டித்தார். பிரதமரை அவதூறு பேசும்போது, அதைக் கண்டிக்காத மேடையில் இருந்த தலைவர்கள், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் பேசிய எஸ்றா சற்குணம், பிரதமர் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்தார்.
பிரதமர் குறித்த எஸ்றா சற்குணத்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக உள்பட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற பேச்சுக்களை திமுக ஊக்கவிப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக–வினர், எஸ்றா சற்குணம் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry