ஆங்கிலேயர்கள் எழுதிய நூலை மேற்கோள்காட்டுகிறார் திருமாவளவன்! மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்!

0
6

திருமாவளவன் சொல்வது எதுவும் மனு ஸ்மிருதியில் இல்லை, இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்காமல் நியாயப்படுத்துவது மக்களிடம் கோபத்தை அதிகரிக்கச்செய்துள்ளது என்று பா..., துணைத்தலைவர் அண்ணாமாலை கூறியுள்ளார்.

மனு தர்மத்தில் பெண்களை பற்றி இழிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக வி.சி.. தலைவர் திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். இதற்கு பா..க. உள்ளிட்ட இந்து மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திருமாவளவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா... மகளிரணி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பா..., துணைத்தலைவர் அண்ணாமாலை, இந்து பெண்களை அவமானப்படுத்தி திருமாவளவன் பேசியது தவறு. தொடர்ந்து இந்து மதத்தை அவர் இழிவுபடுத்தி வருகிறார். எந்த இந்து தர்ம நூலிலும் திருமாவளவன் சொன்ன கருத்துகள் இல்லை. ஆங்கிலேயர்கள் மதமாற்றம் செய்ய எழுதிய நூலில் இருப்பதை, அரசியல் லாபத்துக்காக அவர் பயன்படுத்துகிறார். இக்கருத்தை இந்து தர்மம் ஏற்கவில்லை.

2016-க்குப் பிறகு பா.., மிகப்பெரிய சக்தியாக வருவதை விரும்பாமல், பா...,மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழக பெண்களின் கோபத்தைதான் பா... பிரதிபலிக்கிறது. 2021 தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும்.

மனுஸ்மிருதி விவாதம் செய்யும் விஷயம் அல்ல. இவர்கள் சொல்வது எதுவும் மனு ஸ்மிருதியில் இல்லை. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்காமல் தாம் பேசியதை திருமாவளவன் நியாயப்படுத்துவது மக்களிடம் கோபத்தை அதிகமாக்கியுள்ளது. திருமாவளவனை எம்.பி., என்று பார்க்காமல் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry