விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாநகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை விஜர்சனம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், கோவை சாலை, ஜவஹர் பஜார், 5 ரோடு வழியாக வாங்கல் காவிரி ஆற்றில் கரைக்க பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் பொதுவானவர். திமுக தலைவராக இருந்தால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் செல்ல தேவையில்லை. தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும். இந்துக்களை முதல்வர் புறக்கணிக்கிறார். இது கண்டிக்கதக்கது. இதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வரும் 7ம் தேதி தமிழகத்திற்கு ராகுல் காந்தி வருகை தர உள்ளார். சிறுபான்மையாக இந்துக்கள் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அவர் வருகை தருகிறார். அங்குள்ள கிருஸ்துவ மஷினரிகள் வெளி நாடுகளில் இருந்து நிதிகளை பெற்று அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராகுல் காந்தி காங்கிரஸ், இந்திய காந்தி காங்கிரஸ் அல்ல, சோனியா காந்தி காங்கிரஸ். ராகுல் கோபேக் என்ற முழக்கத்துடன் வரும் 7ம் தேதி தமிழக முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்.”
வரும் 7-ந் தேதி ராகுல் வருகைக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம். #RahulGoBack இயக்கம் முன்னெடுக்கப்படும் – அர்ஜுன் சம்பத். @imkarjunsampath @Indumakalktchi pic.twitter.com/PahdQxYr09
— VELS MEDIA (@VelsMedia) September 2, 2022
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அழைத்து வந்து தமிழகத்தில் மாடல் பள்ளிகளை திறக்க இருக்கிறார்கள். டெல்லியில் மும்மொழி கொள்கை, நவோதயா பள்ளிகள், புதிய கல்விக் கொள்கைகளை அர்விந்த் கெஜ்ரிவால் நடைமுறைபடுத்தி வருகிறார். இதனால் அங்குள்ள பள்ளிகள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் இது எதையும் அனுமதிப்பதில்லை. தமிழக அரசு நவோதயா பள்ளிகளை உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
Also Read : ஜுலை 11 பொதுக்குழு செல்லும்! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் நீடிக்கிறார்!
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அகண்ட காவிரியாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அவற்றை சேமிக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலந்து வீணாகிறது. நெல் மூட்டைகள் வீணாக மழையில் நனைந்து வீணாகிறது. அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும். வெள்ள நீரை நீர் நிலைகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.
– ஆனந்தகுமார், செய்தியாளர், கரூர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry