சீரழிந்த சட்டம் ஒழுங்கு! தலைநகரில் அதிகரிக்கும் திருட்டு, வழிப்பறி! காவல்துறை மீது மக்கள் அதிருப்தி!

0
132

சென்னையில் அண்ணாசாலை ரிச்சி தெருவில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இதனால் ரிச்சி தெரு எப்போதும் பரபரப்பாக இயங்கிக கொண்டிருக்கும். இந்தத் தெருவில், ஆறு மாதங்களுக்கு முன்பு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு ரிச்சி தெருவில், 5 செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் கடைகளின் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப், ஹெட்போன் மற்றும் உதிரிபாகங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Also Read : விஸ்வரூபமெடுக்கும் போதை கலாச்சாரம்! இளைஞரை தாக்கி, சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய கஞ்சா கும்பல்!

இந்தச் சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர்கள் பசிர் அகமது, செய்யது உள்ளிட்டோர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அதிகாலை 3.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கடைகளை நோட்டமிடுகிறது. அதில் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களைத் திருடுவது போன்றும், மற்ற இருவர் வெளியில் நின்று காவல் காப்பது போல் பதிவாகி உள்ளது.

Also Read : மயான பூமியாக மாறும் தமிழகம்! காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை! திமுக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

இதனிடையே, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே பெட்ரோல் வாங்க நடந்து சென்ற ஸ்ரீதர்(23) என்ற இளைஞரை ஆட்டோவில் கடத்தி, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ₹18,000 மதிப்புள்ள செல்போன், ₹5000 மதிப்பிலான ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை பறித்த கும்பல், மறைமலை அடிகளார் பாலம் தாண்டி அவரை இறக்கி விட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry