‘அவெஞ்சர்ஸ்‘ இயக்குநர்களின் படத்தில் தனுஷ்! ரூ.1,500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது நெட்ஃபிளிக்ஸ்!

0
20

அவெஞ்சர்ஸ் திரைப்பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2021 ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது.

கேப்டன் அமெரிக்கா, விண்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் மற்றும் எண்ட் கேம் உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர்கள் ரூஸோ பிரதர்ஸ் எனப்படும் அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ. இவர்கள் அடுத்ததாக மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாக கொண்டுதி க்ரே மேன்என்ற படத்தை இயக்குகின்றனர்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அற்புதமான ஆக்‌ஷன் நிறைந்த அனுபவத்தில் இணைவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறேன் என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

முதன்மை கதாபாத்திரத்தில் க்றிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் நடிக்கின்றனர். ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

பணம் கொடுத்தால் கொலைகளைச் செய்யும் ஒருவனுக்கும், முன்னாள் சிஐஏ அதிகாரிக்கும் இடையிலான கதைதான் தி க்ரே மேன் நாவல். எனவே அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.  சுமார் 200 மில்லியன் யுஎஸ் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராக உள்ளதாம்.

அவெஞ்சர்ஸ்திரைப்பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தனுஷ் ஏற்கனவே 2018ஆம் ஆண்டு, ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர்என்கிற ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

மார்வல் சூப்பர்ஹீரோ படங்களில்இனிஃபினிடி சாகாஎன்று சொல்லப்படும் முதல் மூன்று கட்டங்களைச் சேர்ந்த திரைப்படங்களில், முக்கியமான நான்கு திரைப்படங்களை இயக்கியவர்கள் ரூஸோ சகோதரர்கள். இதில் கடைசியாக இவர்கள் இயக்கியஎண்ட் கேம்‘, உலகத் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படம் என்கிற சாதனையைப் படைத்தது. எனவே கிரே மேன் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry