ஐயப்பனின் ஹரிவராசனம் டியூனில் ஜீசஸை போற்றி பாடல்! சர்ச்சைக்கு வித்திட்ட மலையாள பாதிரியார்!

0
97

சபரிமலை என்றதும் ஐயப்ப பக்தர்களுக்கு நினைவுக்கு வரும் அம்சங்களில் முக்கியமானது, நடைசாத்தும் நேரத்தில் ஒலிபரப்பாகும்ஹரிவராசனம்பாடல். இந்தப் பாடலின் டியூனை அப்படியே காப்பியடித்து ஜீசஸைப் போற்றி பாடல் அமைத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

சபரிமலையில் வழக்கமாக, அதிகாலையில் நடை திறக்கும் போது, கே.ஜே.ஜேசுதாஸின் குரலில்வந்தே விக்னேஸ்வரம்என்ற திருப்பள்ளியெழுச்சிப் பாடலும், மாலையில் நடை திறக்கும் போது, பிரபல கேரளப் பாடகர் ஜெயனின்ஸ்ரீகோவில் நடை துறன்னுஎன்ற மலையாளப் பாடலும் ஒலிக்கும். அதேபோல, இரவில் கோயில் நடை அடைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியதும்ஹரிவராசனம்பாடல் ஒலிக்கத் தொடங்கும்.

எட்டு பந்திகள் கொண்ட இந்தப்பாடல்ஹரிஹரசுதாஷ்டகம்என்றும் அழைக்கப்படுகிறது. இப்பாடலை கம்பக்குடி குளத்தூர் சீனிவாசய்யர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கொன்னகத்து ஜானகி அம்மா என்பவர் இதை இயற்றி சந்நிதானத்தில் பணியாற்றிய தனது கணவர் அனந்தகிருஷ்ண ஐயரிடம் கொடுத்ததாக அவரது வம்சாவளியினர் கூறுகின்றனர். ஆனால், ‘ஹரிவராசனம்பாடல் 1920-களில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது மட்டும் தெரிகிறது.

ஆரம்பத்தில் இப்பாடலை அத்தாழ பூஜையின் போது பாடி வந்தனர். 1951- இல் சபரிமலை கோயில் புதுப்பித்துக் கட்டிய பிறகு, மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரியின் முயற்சியால், நடைசாத்தும் பாடலாக மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஹரிவராசனம் பாடலை பலரது இசையமைப்பில், பலர் பாடியிருந்தாலும், கேரளாவின் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் ஜி.தேவராஜன் இசை அமைத்து, கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம்தான் சபரிமலையில் இன்றளவும் ஒலிக்கிறது.  சுவாமியைத் தூங்க வைக்கிற தாலாட்டுப் பாடல் போல இருப்பதால் மலையாளத்தில் இதைஉறக்குப் பாட்டுஎன்கிறார்கள். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் 1975-ல், ஜி. தேவராஜ் இசையமைப்பில் வெளிவந்தசுவாமி ஐயப்பன்படத்தில்தான் ஹரிவராசனம் பாடலை ஜேசுதாஸ் முதன்முதலில் பாடியிருந்தார்.

Also Read : கிறிஸ்தவர்களுக்கு இடையே நிலவும் தீண்டாமை! உண்மையை உரைக்கும் சிறப்புக் கட்டுரை!

இந்நிலையில், இந்த ஹரிவராசனம் பாடலை கிறிஸ்தவ மிஷனரிகள் ஹைஜாக் செய்துவிட்டன. அமெரிக்காவில் வசிக்கும் மலையாள பாதிரியாரான டாக்டர் ஃபிரான்சிஸ் நம்பியபரம்பில், ஜீசஸை போற்றும் வகையில், ஹரிவராசனம் மெட்டிலேயே பாடலை அமைத்து, அதை யூ டியூபில் பதிவேற்றம் செய்துள்ளார்

காப்பிரைட் எனப்படும் பதிப்புரிமையை டாக்டர் ஃபிரான்சிஸ் மீறியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மத ரீதியாகவும் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள், கிறித்தவர்கள் என இரு மதத்தினரும், டாக்டர் ஃபிரான்சிஸுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read : அமேஸான் நிறுவனம் மீது பகீர் குற்றச்சாட்டு! இந்தியாவில் மதமாற்றத்துக்கு உதவுவதாக புகார்! சட்டத்துக்குப் புறம்பாக கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டும் நிதியுதவி!

இந்துக்களும், வாவரின் நண்பர் என்பதால் இஸ்லாமியர்களில் சிலரும் சபரிமலை கோயிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஐயப்பனை தங்கள் வீட்டு பாலகனாக இந்துக்கள் போற்றும் நிலையில், மதமாற்றும் சக்திகளுக்கு சபரிமலை கோயில் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. எனவே, இந்துக்களை கிறித்துவ மதத்தை நோக்கி ஈர்ப்பதற்காகவே, மதமாற்றிகள் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

Also Read: 108 ஏக்கர் மலை, ‘ஜெபமலைஆனது எப்படி? வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பதாக மோகன் சி லாசரஸ் மீது பரபரப்பு புகார்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry