நீங்க ‘தம்’ அடிக்கறவரா? இந்த பயிற்சி செஞ்சா உங்க லங்ஸ் வலுவாகும்! நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.(Video)

0
67

தசை நார் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குவதுடன், நுரையீரலை வலுவாக்க முடியும் என்று சேலத்தை சேர்ந்த பிரபல யோகா பிரொபசர் அகிலா பாலாஜி தெரிவித்துள்ளார்.

வேல்ஸ் மீடியா யு டியூப் சேனலுக்கு அவர் செய்முறை விளக்கம் அளித்துள்ளார். அதில், தினமும் காலையில் தசை நார் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்ய முடியும். நுரையீரலில் உள்ள செல்களுக்கு அதிக பிராண வாயு கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் அதிக ஆக்சிஜன் கிடைப்பதுடன், நோயிலிருந்து நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும். தசை நார் மூச்சுப் பயிற்சி மூலம் உயிர் சக்தி மற்றும் ஜீவகாந்த சக்தி அதிகரிக்கப்படுவதால், நாள் முழுமைக்கான திறன் கிடைக்கும். இதனால் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்றும் அகிலா பாலாஜி கூறியுள்ளார்.