பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து பற்றிய பரபரப்பு தகவல்! இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் டெல்லி விவசாயிகள் போராட்டம்!

0
11

டெல்லியில் போராடும் விவசாயிகள் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண அழுத்தம் தருமாறு, பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரிட்டன் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போரிஸ் ஜான்சனுக்கு எம்.பி.க்கள் கடிதம் எழுதி இருக்கின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு டெல்லி எல்லையில் 2 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல சுற்று பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விவசாயிகள் போராட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய தொழிலாளர் கட்சி எம்.பி.  தன்மன்ஜீத் சிங், “இந்தியாவில் வேளாண் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அந்நாட்டு அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். இந்த அவையில் பலரும் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பிற பகுதிகளை பூர்விகமாகக் கொண்டவர்கள். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதையும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைப்பதையும், பலப்பிரயோகம் செய்வதையும் பார்க்கும்போது மிகவும் கவலைப்படுகிறோம். இந்த விவகாரத்தில் நீடித்து வரும் முட்டுக்கட்டை தீர, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், பிரிட்டன் பிரதமர் பேச வேண்டும். அமைதி வழியில் போராட அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம். இது, இரு நாட்டு அரசுகள் தங்களுக்குள்ளாக தீர்கக வேண்டிய விஷயம் என்று கூறியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே, கடந்த 5-ந் தேதி பிரிட்டன் எம்.பி.க்கள் 100 பேர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், இந்திய பிரதமர் மோடியிடம் எங்களது கவலைகளை விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும். பிரச்சனையை விரைவாக தீர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குடியரசு தின சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சனை இந்தியா அழைத்திருந்தது. அவரும் தனது வருகையை உறுதி செய்த நிலையில், கடந்த 5-ந் தேதி 100 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டது. அன்றைய தினமே, கோவிட் தொற்ற காரணம் காட்டி தம்மால் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க இயலாது என்று போரிஸ் ஜான்சன் அறிவித்தார். விவசாயிகள் போராட்டம் காரணமாகவே போரிஸ் ஜான்சன் தனது பயணத்தை ரத்து செய்ததாக தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry